News March 31, 2024

₹1000.. ஒருநாள் தள்ளிப்போகிறது

image

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ₹48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கள் கிழமைதான் இந்த பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 31, 2024

இந்தி எதிர்ப்பு போராட்டம் நெருப்புக்கு சமம்

image

இந்தி எதிர்ப்பு போராட்டம் நெருப்புக்கு சமம் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். “இந்தி எதிர்ப்பு போராட்டம் செருப்புக்கு சமமானது அல்ல, அது நெருப்புக்கு சமமானது. தமிழகத்தில் பற்றி எறிந்த வரலாற்று நெருப்பை யாராலும் மறக்க முடியாது. தமிழர் உணர்வை மதிக்காத எவரையும் தமிழகம் மன்னிக்காது” என்று X-இல் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செருப்போடு ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார்.

News March 31, 2024

ஏப்ரலில் 11 நாள் லீவு

image

ஏப்ரல் மாதத்தில் 4 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. ஏப்.9-உகாதி, ஏப்.11-ரம்ஜான், ஏப்.14-தமிழ் புத்தாண்டு, ஏப்.21-மகாவீரர் ஜெயந்தி ஆகிய நாட்கள் அரசு பொது விடுமுறை. இதில் ஏப்.14, 21 ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், 2 நாள் கூடுதல் விடுமுறை கிடைக்காது. இது தவிர ஏப்.19-தேர்தல் விடுமுறை. 4 சனிக்கிழமை, 4 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை உள்ளது. இதைப் பொறுத்து உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள்.

News March 31, 2024

திமுகவின் சரித்திரம் முடிந்துவிடும்

image

மக்களவைத் தேர்தலோடு திமுகவின் சரித்திரம் முடிந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி ஆரூடம் தெரிவித்துள்ளார். சிதம்பரம் பிரசாரத்தில் பேசிய அவர், கள்ளக் கூட்டணி வைப்பதில் திமுக கை தேர்ந்த கட்சி என விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது எனக் கூறிய அவர், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம் எனப் பேசினார்.

News March 31, 2024

இயக்குநராக ஆசைப்பட்ட டேனியல் பாலாஜி

image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் சினிமா உலகை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்நிலையில், நடிகராவதற்கு முன்பு சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என டேனியல் பாலாஜி ஆசைப்பட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்தால் நிச்சயம் நல்ல ஒரு இயக்குநராகி இருப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியது.

News March 31, 2024

பாகிஸ்தானில் சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை

image

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை விதித்துள்ளது. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க அனுமதி அளித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் இதே காரணத்திற்காக, ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் அமைச்சர்கள், தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.

News March 31, 2024

இறைவனின் அருளால் பலாப்பழம் கிடைத்தது

image

பலாப்பழம் சின்னம் கிடைத்தது இறைவனின் செயல் என ஓபிஎஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், “இருப்பதிலேயே பெரிய பழம் பலாப்பழம் தான், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பலா கொடுக்கும். அதைப்போல இந்த தொகுதிக்கு தேவையானதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என நம்பிக்கை தெரிவித்தார்.

News March 31, 2024

I.N.D.I.A கூட்டணியின் ஐந்து கோரிக்கைகள்

image

I.N.D.I.A கூட்டணி சார்பாக தேர்தல் ஆணையத்திடம் பிரியங்கா காந்தி 5 கோரிக்கைகளை வைத்துள்ளார். அவை, தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியை குறிவைத்து ED, IT மற்றும் CBI செய்யப்படுவதை ECI தடுக்க வேண்டும். ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவாலை உடனடியாக விடுவிக்க வேண்டும். வங்கிக் கணக்குகளை முடக்குவதை தடுக்க வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும்.

News March 31, 2024

ஊழல்வாதிகளிடம் ரூ.17,000 கோடியை மீட்டுள்ளோம்

image

இந்த மக்களவைத் தேர்தல் ஊழலை எதிர்ப்போருக்கும், ஊழலை காக்கப் போராடுவோருக்கும் இடையே நடக்கும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி.,யின் மீரட்டில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளின் பணம் திருடப்படுவதை தடுத்திருக்கிறோம். ஊழலுக்கு எதிராக நான் போராடுவதால், சிலர் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ஊழல்வாதிகளிடம் இருந்து ரூ.17,000 கோடியை மீட்டுள்ளோம்’ என்றார்.

News March 31, 2024

LIC டீசர் ஏப்.14ல் வெளியாகிறது?

image

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘LIC’. ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதலில் எஸ்.கே நடிப்பில் உருவாக இருந்த இப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் ஏப்.14ல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!