India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1960.30ஆக இருந்த நிலையில், ரூ.30.50 குறைந்து ரூ.1,930ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்டுத் தருவேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் நடைபெற்ற பாஜக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “கச்சத்தீவை முந்தைய காங்கிரஸ் அரசு தாரை வார்த்து விட்டது. அதனால் மீனவர்கள் உரிமை போய்விட்டது. அந்தத் தீவை மீட்க வேண்டுமென மோடி கூறியுள்ளார். நானும் கச்சத்தீவை தர்மயுத்தம் நடத்தி மீட்டுத் தருவேன்” என்றார்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பய்குரியில் வீசிய கடும் புயலில், 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் விநியோகம் பாதிப்பு அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பவர் பிளேவில் சொதப்பியது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என CSK கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், “2வது இன்னிங்ஸில், பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது. ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். இருந்தாலும் இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். 2 வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம் தான். அதனால் கவலைப்பட தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் (ஏப்.1) புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச் சாவடிகளில், அவ்வப்போது சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலூர், தி.மலை, வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் இன்று முதல் ஒரு நாளில் திரும்பும் கட்டணம் ₹5 – ₹20 வரையும், மாதாந்திர பாஸ் கட்டணம் ₹100 – ₹400 வரை கட்டணம் உயர உள்ளது.
▶நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஏப்.17, 18 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
▶தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது: தேர்தல் ஆணையம்
▶திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சீமான்
▶பலாப்பழம் சின்னம் கிடைத்தது இறைவனின் செயல்: ஓபிஎஸ் மகிழ்ச்சி
▶மக்களவைத் தேர்தலோடு திமுகவின் சரித்திரம் முடிந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி
▶ஐபிஎல்: சென்னை அணி தோல்வி
தமிழகத்தின் தினசரி மின்நுகா்வு 426.439 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் உச்சபட்ச மின் நுகா்வும் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததைத் தொடா்ந்து, ஏசி-க்களின் பயன்பாடு அதிகரித்தது. இதே நிலை தொடா்ந்து நீடித்தால், ஏப்ரல் மாதத்தில் தினசரி மின் தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டும் என கூறப்படுகிறது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தொழில் துறை முற்றிலும் சீர்குலைந்துவிடும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு பிரசாரத்தில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடை வழங்கியது திமுக அரசு தான். எதையும் செய்யமாட்டோம் என்பதே அதிமுக – பாஜக மாடல். ஊழல் செய்த பாஜகவினர் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அதிமுக ஆட்சி” எனக் கூறியுள்ளார்.
நஸ்லன், மமிதா பைஜு நடித்த ‘பிரேமலு’ திரைப்படம், ஏப்.12ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. நகைச்சுவை + காதல் கதைக்களத்தில் உருவான இப்படம், கடந்த பிப்.9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்நிலையில், மலையாளம், தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் OTT-இல் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.