News March 30, 2024

அமெரிக்க விசா கட்டணம் பலமடங்கு உயர்வு

image

விசாக்களுக்கான கட்டணத்தை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது. வெளிநாட்டினரை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்த வழிவகுக்கும் எச்.1பி விசா படிவ கட்டணம் ரூ.38,000ல் இருந்து ரூ.64,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கான இபி-5 விசா கட்டணம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாகவும், எல்.1 விசா கட்டணம் ரூ.38,000ல் இருந்து ரூ.1.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News March 30, 2024

கரும்பு விவசாயி வேட்பாளர் திடீர் வாபஸ்

image

பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் திருப்பூரில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட சந்திரசேகர் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும், தலைமை மீதான அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்வதாக கூறினார். கரும்பு விவசாயி சின்னத்திற்காக நாதக எவ்வளவோ முயன்றும் அச்சின்னத்தை பெற முடியாமல் மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது.

News March 30, 2024

காங்கிரசுக்கு மேலும் 2 நோட்டீஸ்களை அனுப்பிய ஐ.டி.

image

காங்கிரசுக்கு மேலும் 2 நோட்டீஸ்கள் வருமான வரித்துறையால் அனுப்பப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அக்கட்சிக்கு ரூ.1,823 கோடி செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷ் அளித்துள்ள பேட்டியில், “வருமான வரித்துறை நேற்றிரவு மேலும் 2 நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறது. இது வரி தீவிரவாதம்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு எல்.முருகன் பதிலடி

image

இந்தியை பிரதமர் பரப்புவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் மோடி. 2 ஆண்டுகளாக காசித் தமிழ்ச் சங்கமம் விமரிசையாக நடத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, செம்மொழி ஆய்வு மையத்திற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுத பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் என விளக்கமளித்தார்.

News March 30, 2024

பாரத ரத்னா விருது வாங்க வராத அத்வானி

image

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாரத ரத்னா விருதை வாங்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று வரவில்லை. அவருடன் சேர்த்து, 5 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் 4 பேர் சார்பில் அவர்களின் வாரிசுகள் நேரில் விருதை பெற்றுக் கொண்டனர். ஆனால், அத்வானியோ, அவரது குடும்பத்தினரோ வரவில்லை. உடல்நிலை காரணமாக அத்வானியின் வீட்டுக்கு சென்று விருது அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 30, 2024

டைம் டிராவல் படத்தில் நடிக்கிறாரா ரஜினி?

image

ரஜினி நடிக்கவுள்ள புதிய படம், டைம் டிராவல் படமாக இருக்கலாம் என தகவல் பரவி வருகிறது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி தற்போது நடிக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள பட போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ரஜினியின் பின்னால் டைம் மெஷின் இருப்பது போல உள்ளது. இதை வைத்து டைம் டிராவல் படமாக இருக்கலாம் என தகவல் பரவுகிறது.

News March 30, 2024

டேனியல் பாலாஜி மறைவை நம்ப முடியவில்லை

image

நடிகை ராதிகாவின் சித்தி தொடரில் அறிமுகமாகி சின்னத்திரையிலேயே தனித்துவம் காட்டியவர் பாலாஜி. அதில், டேனியல் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அவர் டேனியல் பாலாஜி ஆனார். இந்நிலையில், அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், டேனியல் பாலாஜியின் மறைவை நம்பமுடியவில்லை என்றும் இச்செய்தி தன்னை துயரில் ஆழ்த்துவதாகவும் ராதிகா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை

image

நாடு முழுவதும் ஏப்.19 முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பொதுவாக வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், 7 கட்டங்களாக தேர்தல் நடப்பதால் ஏப்.19 காலை 7 மணி முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

News March 30, 2024

ஒவ்வொரு இந்தியன் தலையிலும் ரூ.1.5 லட்சம் கடன்

image

சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் ரூ.150 லட்சம் கோடி கடன் பெற்றதால், நாட்டின் மொத்த கடன் ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பாஜக அரசு வாங்கிய கடனால் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் ரூ.1.5 லட்சம் கடன் சுமை ஏறியுள்ளது என வேதனை தெரிவித்தார்.

News March 30, 2024

உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது

image

அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்யத் தவறினால், நீதிமன்றங்கள் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக பேசிய அவர், “அரசாங்கங்களும், அதன் அதிகாரிகளும் தனி நபர் உரிமைகளை பாதிக்கும் வகையில், பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார்கள். அதனை நீதித்துறை வேடிக்கை பார்க்காது. பலமுறை கடுமையான நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துள்ளோம்” என்றார்.

error: Content is protected !!