News March 30, 2024

20 ஆண்டுக்குப் பின்… இருவர்

image

20 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றுள்ளது. உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 16 இடங்களில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் தான் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும். இதில் பிரனாய் (9), லக்சயா (16) ஆகிய இரு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அபின் ஷ்யாம், நிகில் கனேட்கர் என இரு வீரர்கள் பங்கேற்றனர்.

News March 30, 2024

நடிகர் டேனியல் பாலாஜிக்கு மரணத்திற்கு காரணம் இதுதான்

image

திருவான்மியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு இரவு 1 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சற்றுநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ஓட்டேரி அரசு மின் மயானத்தில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

News March 30, 2024

225 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள்

image

225 மக்களவை எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்தது. அதில் 225 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், அதில் 29% பேர் மீது கொலை, கொலை முயற்சி, இனக் கலவரம் தூண்டியது, கடத்தல் என கடுமையான வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

News March 30, 2024

வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்புமனு பரிசீலனை நடந்து, 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.

News March 30, 2024

LSG Vs PBKS: வெல்லப்போவது யார்?

image

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் & பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் LSG 2 முறையும், PBKS 1 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் RCB, KKR அணிகளுக்கு இடையேயான 11ஆவது லீக் போட்டி லக்னோ ஸ்டேடியத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.

News March 30, 2024

BREAKING: நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

image

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (48) காலமானார். வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான டேனியல் பாலாஜி, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இன்று காலையில் இருந்து நடிகர்கள், நடிகைகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News March 30, 2024

வள்ளலாரின் பொன்மொழிகள்

image

✍அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை; உண்மையைச் சொல் அது மரியாதையை காக்கும்.✍எல்லா உயிர்களிடத்திலும் இறை வியாபித்திருக்கிறார் என்று அறிதலே மெய்யியலின் மெய். ✍பாவம், புண்ணியம் என்பன மனம், சொல், செயல் ஆகிய முவ்வழிகளில்தான் நம்மை வந்தடைகின்றன.✍உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள்.✍சோதனைகளே ஒருவருக்கு அவரை அவருக்கே யாரென அறிமுகப்படுத்துகிறது.

News March 30, 2024

அந்த வாய்ப்பை சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும்

image

ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும் என்று இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் அஞ்சு ஜார்ஜ் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட தேசிய விளையாட்டு சங்கங்கள் இன்னும் ஒலிம்பிக் போட்டிக்கான தங்கள் அணியையே அறிவிக்கவில்லை. இந்நிலையில், அதற்குள் எப்படி சரத் கமல் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை” என்றார்.

News March 30, 2024

வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை தவறு

image

இந்தியா பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகமே கவனித்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி பெருமிதமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கு எட்டப்பட வாய்ப்பில்லை என்று பாராசூட் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். அவரது கூற்றை ஏற்க முடியாது. அவரது கருத்து இந்தியாவைப் பற்றி தெரியாதவர் கூறுவது போல் உள்ளது” எனத் தெரிவித்தார்.

News March 30, 2024

மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்

image

தேர்தல் ஆணையமே மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல தெரிகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனே வழங்குகிறது. எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய சின்னத்தைக் கூட கொடுக்க மறுக்கிறது. இதற்கெல்லாம் மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

error: Content is protected !!