India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலிவுட்டில் ஆந்திராவை சேர்ந்த பார்வையற்ற தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் படத்திற்கு ‘ஸ்ரீ’ என பெயரிடப்பட்டிருந்தது. இயக்குனர் துஷார் ஹிராநந்தானி இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கும் இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் மே 10ஆம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில், தற்போது படத்தின் தலைப்பு ‘ஸ்ரீகாந்த்’ என மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புழல் அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்க பூவை ஜெகன் மூர்த்தியும் அழைக்கப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதே இதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. முன்னதாக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட அந்தக் கட்சி விரும்பியது.
பஞ்சாபிற்கு எதிரான 11ஆவது ஐபிஎல் போட்டியில், 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும் 100 ரன்களுக்கு பிறகு விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து, பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. மயங்க் யாதவ்-3, மோசின் கான்-2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கோடைக்காலத்தில் சர்பத், ஜூஸ் போன்றவற்றில் ஊற வைத்த பாதாம் பிசினை சேர்த்துக் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். வடமாநிலங்களில் பிரசவமான பெண்களுக்கு கோந்து லட்டு கொடுப்பது வழக்கம். இது பெண்களின் உடல் வலிமைக்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை எந்த வயதினரும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அடிக்கடி சளி, வீஸிங் பிரச்னைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பாதாம் பிசினை கொடுப்பதை தவிர்க்கலாம்.
பிரதமர் மோடியின் முழு அன்பை பெற்றவர் பாரிவேந்தர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெரம்பூரில் பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘வேலை செய்வதற்காக ஒரு தனி அரசாங்கத்தை பாரிவேந்தர் நடத்தி வருகிறார்’ என்றார். கடந்த முறை திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தார்.
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சிவாங்கி தற்போது படங்களில் பாடுவதில் பிஸியாக உள்ளார். இதனிடையே தனது த்ரெட்ஸ் பக்கத்தில், ’சமூக வலைதளங்களை திறந்து பார்த்தால், யாராவது ஒருவருக்கு நிச்சயம், திருமணம், கர்ப்பம் என வருகிறது. ஒருவேளை நானும் அந்த கட்டத்திற்கு வந்து விட்டேனா?’ எனப் பதிவிட்டுள்ளார். இதனை தனக்கும் திருமணம் என்பதை சிவாங்கி மறைமுகமாக சொல்வதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது ஏப்ரல் மாதம் முழுவதும் சனி பகவான் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார். இதனால் தனுசு, சிம்மம், கன்னி, துலாம் ராசியினர் சோதனை மேல் சோதனையை அனுபவிக்கப் போகின்றனர். குறிப்பாக பணம் கிடைப்பதில் பிரச்னை, கொடுத்த பணத்தை கேட்டால் தகராறு, வழக்குகளில் சாதகமற்ற சூழல், வீண் வம்பு, சண்டை, சச்சரவு, தொல்லை, சிக்கல் என பலகட்ட சோதனைகள் மேற்கண்ட ராசியினரை வாட்டி வதைக்கப் போகிறது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறிய ராகவா மகுந்தாவின் தந்தைக்கு தெலுங்கு தேசம் கட்சி வாய்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஓங்கோல் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ஸ்ரீனிவாசலு ரெட்டி, சமீபத்தில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். தற்போது, இதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக ஸ்ரீனிவாசலு ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தைவிட ஆபத்தானது ஹான்ஸ், கூல் லிப், குட்கா போன்றவற்றை உபயோகிக்கும் பழக்கம். இதற்கு அடிமையானவர்கள் அதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு செல்லக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இந்தப் பழக்கம் சம்பந்தப்பட்டவர்களை மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் அழிக்கும் என்பதால் உடனடியாக அவற்றை கைவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 30 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டியுள்ளார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் வெற்றிபெற 72 பந்துகளில் 127 ரன்கள் தேவை. பேரிஸ்டோ 23* ரன்கள் எடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.