India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தால் காவிரியில் நீர் வர வாய்ப்பில்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் பிரசாரத்தின் போது பேசிய அவர், “திமுகவுக்கு வாக்களிப்பது பாவத்தை செய்வதற்கு சமம். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நீரைப் பெற்றுத் தருவோம் என நாடகம் போட்டு மக்களை ஏமாற்றுவதே திமுகவின் செயல்” எனக் குற்றம்சாட்டினார்.
அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது வரை இல்லை என நடிகர் விஜய் ஆண்டனி ஓப்பனாக கூறியுள்ளார். ‘ரோமியோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனைவரும் சேர்ந்து அரசியலுக்கு அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நோட்டாவிற்கு மட்டும் வாக்களிக்கக் கூடாது. சிறந்தது என்று ஒன்று இருக்கும். அதற்கு வாக்களிக்க வேண்டும். வருகிற மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 21 வயதான மயங்க் யாதவ், மணிக்கு 150+ கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். ஏலத்தில் வெறும் ரூ.20 லட்சத்துக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட இவர், முதல் ஐபிஎல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் ஆகும். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 8 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மத்திய அரசு எப்படி செயல்பட கூடாது என்பதற்கு பாஜக ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை வடக்கிலும் ஒலிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியால், பொதுமக்களின் தூக்கம் போய்விட்டது. மேலும், தேர்தல் பத்திர ஊழலால், பாஜகவினரின் தூக்கம் தொலைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம்
▶திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் தான் தமிழ்நாட்டின் எதிரிகள்: அண்ணாமலை
▶அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்.1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன
▶வாயை திறந்தால் அண்ணாமலை பொய் மட்டுமே பேசுகிறார்: கனிமொழி
▶மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது: முதல்வர் ஸ்டாலின்
▶நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
மக்களவைத் தேர்தலில் தோற்று விடுவோமென்ற அச்சத்தில், பாஜக அரசு தன்னாட்சி அதிகாரமிக்க சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் காங்கிரஸை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் ‘காங்கிரஸ் மீது வரி பயங்கரவாதத்தை தொடங்கியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், பாஜகவின் வரி ஏய்ப்பை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்’ என்றார்.
தென்கிழக்கு மத்திய ரயில்வே 733 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 12.
இணையதளம்: <
Sorry, no posts matched your criteria.