News March 31, 2024

இன்ஸ்டாவில் புதிய சாதனை படைத்த சிஎஸ்கே!

image

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 1.50 கோடி பாலோயர்களை கொண்ட முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது. சென்னை அணியை தொடர்ந்து 1.35 கோடி பாலோயர்களுடன் பெங்களூரு அணி 2ஆவது இடத்தையும், 1.32 கோடி பாலோயர்களுடன் மும்பை இந்தியன் அணி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இன்ஸ்டாவை போன்று, டிவிட்டரிலும் 1.04 கோடி பாலோயர்களுடன் சி.எஸ்.கே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 31, 2024

மோசடி கடன் செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ரிசர்வ் வங்கி!

image

மோசடி டிஜிட்டல் கடன் செயலிகளை அடையாளம் கண்டு நீக்க ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சி (DIGITA)என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளது. இந்த அமைப்பு, கடன் செயலிகளை சரிபார்த்து, ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கும். DIGITA சான்றிதழ் பெறாத கடன் செயலிகள் ஆபத்தானவை என அறிந்துகொள்ளலாம். மேலும், ரிசர்வ் வங்கி 442 தனித்துவமான டிஜிட்டல் கடன் செயலிகளை கூகுளின் வெள்ளைப்பட்டியலில் வெளியிட்டுள்ளது.

News March 31, 2024

தடுமாறும் சென்னை அணி

image

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தடுமாறி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த DC அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்கள் ருதுராஜ் 1 (2), ரச்சின் 2 (12) ரன்களில் அவுட்டாகினர். CSK அணி தற்போது வரை 5 ஓவர்களில் 23/2 ரன்கள் எடுத்துள்ளது.

News March 31, 2024

சிலிண்டர் விலை.. முக்கியத் தகவல்

image

வர்த்தகம், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ஆம் தேதி மாற்றி அமைக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஜூன் 1ஆம் தேதி வரை விலை மாற்றம் இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜூன் 4-ல் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமையும் புதிய அரசைப் பொறுத்து சிலிண்டர் விலை மாறலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது வீ.உ.சிலிண்டர்-₹918, வர்த்தக சிலிண்டர் ₹1960க்கு விற்பனையாகிறது.

News March 31, 2024

அயோத்தி ராமருக்கு இனிமேல் பருத்தி உடை

image

கோடைக்காலம் முடியும் வரை அயோத்தி ராமருக்கு பருத்தி உடை மட்டுமே அணிவிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உ.பி., மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்நிலையில், கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடைக்காலம் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் ராமருக்கு பருத்தி உடைகள் மட்டுமே அணிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

News March 31, 2024

நல்ல திட்டங்களை குறைசொல்லும் அதிமுக, பாஜக!

image

திமுக கொண்டு வந்ததால் நல்ல திட்டங்களை கூட அதிமுகவும், பாஜகவும் குறை சொல்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘வேண்டுமென்றே அவதூறு கூறுகின்றனர். வெள்ள நிவாரணத் தொகையை கூட பிச்சை என்று சொல்லி பாஜக இழிவுப்படுத்தியது. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட ஆட்சியை கொடுத்தது அதிமுக தான். மக்களுக்கான அரசாக திமுக செயல்பட்டு வருகிறது’ என்றார்.

News March 31, 2024

நள்ளிரவு முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்கிறது

image

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் (ஏப்.1) புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச் சாவடிகளில் அவ்வப்போது சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில முக்கிய சுங்கச் சாவடிகளில் நாளை முதல் ₹5-₹20 வரை கட்டண உயர உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயரும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

News March 31, 2024

சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு

image

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய வார்னர் 52, ப்ரித்வி ஷா 43, ரிஷப் பந்த் 51 ரன்கள் குவித்தனர். சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பதிரன 3, முஸ்தபிஃசூர் 1, ஜடேஜா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னும் சற்று நேரத்தில் சென்னை அணி களமிறங்க உள்ளது.

News March 31, 2024

நாய் சிங்கமாகாது..ஓநாயாக வேண்டுமானால் மாறலாம்..!

image

நாய் என்றைக்கும் சிங்கமாகாது. ஓநாயாக வேண்டுமானால் மாறலாமென டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார். தேனியில் பிரசாரத்துக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘துரோகிகள் கையில் அதிமுக இருக்கிறது. அதை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதமாக அமமுக தொடங்கப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக, தினகரன் வீட்டு காவல் நாயாக இருந்தோம். தற்போது சீறும் சிங்கமாக மாறிவிட்டோம் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியிருந்தார்.

News March 31, 2024

IPL: தோனி புதிய சாதனை

image

சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவந்த டெல்லி வீரர் ப்ரித்வி ஷாவை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய தோனி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை (300) ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கம்ரான் அக்மல் 274, தினேஷ் கார்த்திக் 274, டிகாக் 270, பட்லர் 209 அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனியின் இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

error: Content is protected !!