India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க விதிகளில் இடமில்லையென திகார் சிறை நிர்வாகம், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கவிதாவிற்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதால் பல்வேறு வசதிகள் கேட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
ஹாலிவுட் நடிகர் பெர்டோமோ (27) விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 2018-ல் வெளியானது ‘Chilling Adventures of Sabrina’ வெப் தொடர் மூலம் பிரபலமான சான்ஸ் பெர்டோமோ அதன் 2 சீசன்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கிய அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
I.N.D.I.A கூட்டணி 450 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் வரலாறு காணாத வகையில் பாஜக ஊழல் செய்துள்ளது. அதையும் தாண்டி சிபிஐ, ஐடி போன்ற அமைப்புக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கிறார்கள். பாஜகவின் இந்த அராஜகத்துக்கு வரும் தேர்தலில் மக்கள் பதிலடி தருவார்கள்” என்றார்.
சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து சென்னை அணி தோல்வியை தழுவியது. முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த டெல்லி அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இன்றிரவு குடலிறக்க அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ளது. நேற்று அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து நெதன்யாகு தற்காலிகமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, பிரதமர் பொறுப்பை துணை பிரதமரான யாரிவ் லெவின் கூடுதலாக கவனிப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி அதிரடி காட்டி வருகிறார். முதல் 2 போட்டிகளில் களமிறங்காத தோனி, இன்றைய போட்டியில் களமிறங்கி பவுண்டரி, சிக்சர் என விளாசி வருகிறார். இக்கட்டான சூழலில் இருக்கும் சென்னை அணியின் ஒரே நம்பிக்கை தோனி தான் என்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தோல்வி விளிம்பில் இருக்கும் சென்னை அணியை தோனி மீட்பாரா?
Uber ஆட்டோவில் பயணம் செய்த ஒரு நபருக்கு ரூ.7.66 கோடி பில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபக் என்ற நபர் ரூ.62க்கு Uber ஆட்டோ புக் செய்துள்ளார். பயண தூரத்தை அடைந்தபின் அவருக்கு ரூ.7,6கோடிக்கு பில் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். பயணக் கட்டணம் ரூ. 1,67,74,647, காத்திருப்பு கட்டணம் ரூ. 5,99,09189 என பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுதலாக இது நடந்ததாக Uber மன்னிப்பு கேட்டுள்ளது.
நவகிரகங்களின் மங்கள நாயகனான குரு பகவான் கோடி, கோடியாய் அள்ளிக் கொடுப்பார். இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்த குரு பகவான் மே மாதத்தில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்வதால், மேஷம், கடகம், மகரம், மீன ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப் போகிறது. வீடு, நகை, வாகனம் வாங்கும் யோகம், தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பு, திருமண வரன் தேடி வருவது போன்ற பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலை., மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்பிற்கான CUET-UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிப்பதாக NTA அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. CUET-UG 2024 தேர்வு மே 15 முதல் 31 வரை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 1.50 கோடி பாலோயர்களை கொண்ட முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது. சென்னை அணியை தொடர்ந்து 1.35 கோடி பாலோயர்களுடன் பெங்களூரு அணி 2ஆவது இடத்தையும், 1.32 கோடி பாலோயர்களுடன் மும்பை இந்தியன் அணி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இன்ஸ்டாவை போன்று, டிவிட்டரிலும் 1.04 கோடி பாலோயர்களுடன் சி.எஸ்.கே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.