News April 1, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் திமுகவை நம்ப வேண்டாம்: அண்ணாமலை
▶தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு
▶பாஜகவை கண்டு திமுகவும், அதிமுகவும் அஞ்சுகிறது: குஷ்பு விமர்சனம்
▶I.N.D.I.A கூட்டணி வென்றால் ஒரே நாளில் பிரதமரை அறிவிப்போம்: ப.சிதம்பரம்
▶பாஜக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?: செல்வப்பெருந்தகை சவால்
▶அண்ணாமலை செருப்புக்கு சமானவர்: செல்லூர் ராஜூ ஆவேசம்

News April 1, 2024

இந்த பிரச்னை உடையவர்கள் பசலைக்கீரையை தவிர்க்கலாம்

image

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள், சிறுநீரகக் கல் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். சிறுநீரகக் கல் என்பது ஆக்ஸலேட் கற்களைக் குறிக்கும். கீரைகளில் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம். அதாவது 100 கிராம் கீரையில் 755 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் (Oxalates) இருக்கும். எனவே கிட்னி ஸ்டோன் பிரச்னை உள்ளவர்கள், கீரை, குறிப்பாக பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

News April 1, 2024

எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்

image

பாமகவிற்கு வேறு கொள்கை, பாஜகவிற்கு வேறு கொள்கை என சிலர் விமர்சனம் செய்கிறார்கள். எங்கே சென்றாலும் எங்கள் கொள்கைகளை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. இது குறித்து தர்மபுரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சமூகநீதி குறித்த பாமகவின் கோரிக்கைகளை மோடி ஏற்றுக்கொள்வாரா என வினவியிருந்தார்.

News April 1, 2024

இருசக்கர வாகனங்கள் விற்பனை 13% அதிகரிப்பு

image

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் இருசக்கர வாகனங்களின் விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து தேவை அதிகரிப்பால், 2023-24ஆம் ஆண்டில் 1.84 முதல் 1.85 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது தவிர, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை 95 லட்சத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

News April 1, 2024

கவிதாவுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க முடியாது

image

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க விதிகளில் இடமில்லையென திகார் சிறை நிர்வாகம், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கவிதாவிற்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதால் பல்வேறு வசதிகள் கேட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

News April 1, 2024

விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகர் பலி

image

ஹாலிவுட் நடிகர் பெர்டோமோ (27) விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 2018-ல் வெளியானது ‘Chilling Adventures of Sabrina’ வெப் தொடர் மூலம் பிரபலமான சான்ஸ் பெர்டோமோ அதன் 2 சீசன்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கிய அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

News April 1, 2024

450 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்

image

I.N.D.I.A கூட்டணி 450 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் வரலாறு காணாத வகையில் பாஜக ஊழல் செய்துள்ளது. அதையும் தாண்டி சிபிஐ, ஐடி போன்ற அமைப்புக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கிறார்கள். பாஜகவின் இந்த அராஜகத்துக்கு வரும் தேர்தலில் மக்கள் பதிலடி தருவார்கள்” என்றார்.

News March 31, 2024

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி

image

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து சென்னை அணி தோல்வியை தழுவியது. முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த டெல்லி அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.

News March 31, 2024

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தற்காலிகமாக விலகினார்

image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இன்றிரவு குடலிறக்க அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ளது. நேற்று அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து நெதன்யாகு தற்காலிகமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, பிரதமர் பொறுப்பை துணை பிரதமரான யாரிவ் லெவின் கூடுதலாக கவனிப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2024

அதிரடி காட்டும் தோனி

image

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி அதிரடி காட்டி வருகிறார். முதல் 2 போட்டிகளில் களமிறங்காத தோனி, இன்றைய போட்டியில் களமிறங்கி பவுண்டரி, சிக்சர் என விளாசி வருகிறார். இக்கட்டான சூழலில் இருக்கும் சென்னை அணியின் ஒரே நம்பிக்கை தோனி தான் என்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தோல்வி விளிம்பில் இருக்கும் சென்னை அணியை தோனி மீட்பாரா?

error: Content is protected !!