India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப் விநியோகிக்க உள்ளனர். தொடர்ந்து, இப்பணிகள் ஏப்.13ஆம் தேதி நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கச்சத்தீவு விவகாரம் கடந்த 2 நாள்களாக தமிழகத்தில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். வரி பகிர்வு, பேரிடர் நிதி, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டம் ஆகிய மூன்று கேள்விகளை எழுப்பிய அவர், திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிஎஸ்கேவுடனான போட்டியில் அதிரடியாக விளையாடி பழைய ஃபார்முக்கு ரிஷப் பண்ட் திரும்பியிருப்பதை கண்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து குணமடைந்த பிறகு, ஐபிஎல் போட்டியிலேயே முதலில் களமிறங்கியுள்ளார். பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுடனான போட்டிகளில் சொதப்பிய போதிலும், சிஎஸ்கேவுக்கு எதிராக 51 ரன்களை குவித்தார். இதில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.
கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், 1974ல் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்போது ஏன் கிளப்புகிறார்? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2000 சதுர கி.மீ இந்திய பூமியை சீனா அபகரித்துள்ளதாகவும், அதற்கு பிரதமர் மோடி செய்தது என்ன? எனவும் சாடிய அவர், நல்லுணர்வுடன் பரிமாற்றம் செய்வது வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு என்றும் கூறினார்.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹680 உயர்ந்து ₹51,640க்கும், கிராமுக்கு ₹85 உயர்ந்து ₹6,455க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ₹81.60க்கும், கிலோ வெள்ளி ₹600 உயர்ந்து ₹81,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ₹2,160 அதிகரித்துள்ளது.
அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். அரசின் ரகசியங்களை வெளிப்படையாக கூறியதன் மூலம் பெரும் தவறு செய்துள்ளதாகவும், தேர்தலுக்காக பதவிப் பிரமாணத்தை மீறும் வகையில் கொள்கை முடிவுகளை வெளியிடுவதாகவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, காங். உடன் இணைந்து கச்சத்தீவு குறித்த உண்மைகளை திமுக மறைத்ததாக ஜெய்சங்கர் கூறினார்.
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி (10;45 AM)) பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்ந்து 74,114 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி168 புள்ளிகள் உயர்ந்து 22,495 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் வாக்கு சேகரித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார். கோவை தொகுதியில் பாஜக அபார வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது என்று சூளுரைத்த அவர், ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகள், நெசவாளர்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.
மக்கள் தன்னை நினைவில் வைத்திருக்க இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒரு காரணம் என்று நடிகர் ராமராஜன் பாராட்டியுள்ளார். ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சாமானியன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராமராஜன், “எனது படத்தைப் போல வேறு யார் படத்துக்கும் இளையராஜா இசையமைத்தது இல்லை. அவரது பாடல்களே என்னை வாழ வைக்கிறது” என்றார்.
கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் பிரிந்து இருப்பதால் தான் பாஜக வெற்றி பெறுகிறது. அதனால் தான், பிரிந்து கிடந்த கட்சிகளை ஒருமைப் படுத்தினேன் என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.