India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஏப்ரல் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்தது
▶கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: பிரதமர் மோடி
▶வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்
▶பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும்: உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
▶பிரதமர் மோடி வெள்ளம் வந்தபோது ஏன் வரவில்லை: உதயநிதி கேள்வி
▶மோடி ‘மேட்ச் பிக்சிங்’ செய்வதாகக் கூறிய ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதியின் பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலா. இவர் சமீபத்திய பேட்டியில், “சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள். நாட்டில் நடக்கும் அனைத்து சாதியக் கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிராமண சபா, பிராமணர்கள் ஒன்றுசேர்ந்து அவரை தோற்கடிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளித்த நண்பர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீமானுத்துப் பகுதியில் உள்ள கிணற்றில் ஆனந்த், பிரேம்குமார் ஆகியோர் கிணற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ATR என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில், ₹5,000 கோடியில் 24 லட்சம் விவிபேட்கள் வாங்கப்பட்டும், அவற்றில் 20,000 இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது. மேலும், விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளில் 5% மட்டுமே எண்ணப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஜெருசலேத்தில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் நேற்று அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவரது உடல்நிலை குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமர் மிகவும் நலமுடன் உள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்’ என குறிப்பிட்டுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சினிமாத்துறையில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தானே இயக்கி, தயாரித்து, நடிக்க உள்ளதாக X தளத்தில் தெரிவித்துள்ளார். ‘எனக்கு உங்களுடைய ஆசீர்வாதம் தேவை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தப் படத்தை நீங்கள் திரையில் காண்பீர்கள் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார். இருப்பினும் இன்று ஏப்ரல் 1 என்பதால் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்தது. பொறுப்புடன் விளையாடிய ரியான் பராக், அரைசதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் 16ஆவது ஓவர்களிலேயே இலக்கை அடைந்து, ராஜஸ்தான் அணி 3ஆவது வெற்றியை பதிவு செய்தது.
₹2,000 நோட்டுகளில் 97.69 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2023, மே 19ஆம் தேதி ₹2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது ₹ 3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, ₹8,202 கோடி மதிப்புள்ள ₹2,000 நோட்டுகள் மட்டுமே மக்களிடம் புழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவுடன் செவ்வாய் பகவான் இணைந்தது அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் மேஷம், கன்னி, கும்பம், மீன ராசியினர் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க உள்ளனர். தொழிலில் நஷ்டம், குடும்ப வாழ்க்கையில் பிரச்னை, பண வரவில் சுணக்கம், வீண் விவாதங்கள் தேடி வருவது என மேற்கண்ட ராசியினர் அடிமேல் அடி வாங்கப் போகின்றனர். தகுந்த பரிகாரங்களை செய்துகொண்டால் நல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Sorry, no posts matched your criteria.