India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயர் மாற்றம் குறித்து எம்.பி.கனிமொழி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, பாஜக அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பாஜக?. தமிழகத்தில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் மோடி, சீன எல்லை பிரச்னை குறித்து எப்போது வாய் திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ரத்னம்’ படத்துக்கான நிலுவை சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, விஷால் மேல்முறையீடு செய்திருந்தார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷால் மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 123
▶குறள்: செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
▶பொருள்: அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து, அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
இந்திய ரயில்வே நிர்வாகம், இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை, இனி பணம் கொடுத்து எடுக்க வேண்டிய தேவை இல்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து எடுத்துக்கொள்ள முடியும். இந்த வசதியானது, இன்று முதல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் தோல்வி பயத்தில் உள்ளதாக இபிஎஸ் கூறியுள்ளார். சோளிங்கரில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், “3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக செய்தது என்ன?. ரூ.3 லட்சம் கோடி கடன் மட்டுமே அரசு வாங்கியுள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அறிவித்தால், அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் கிடைக்கும்” என்றார்.
கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது என நடிகை தமன்னா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “காவாலா பாடலைப் பார்த்துவிட்டு சிலர் கீழ்த்தரமாக இருக்கிறது என்றெல்லாம் கூறினார்கள். கிளாமர் பாடல்கள் ஒருவகை கொண்டாட்டம் தான். அதை ரசிக்கப் பழக வேண்டுமே தவிர, இப்படி அவதூறு பரப்பக்கூடாது. பெண்களும் கிளாமர் குறித்தான பார்வையை மாற்ற வேண்டும்” என்றார்.
இன்று (ஏப்ரல் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
ராஜஸ்தான் அணிக்கு எதிரான 14ஆவது ஐபிஎல் போட்டியில், மும்பை அணி தோல்வி அடைந்தது. நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் அதல பாதாளத்தில் உள்ளது. மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த ரன்களை குவித்த அணியும் மும்பை தான். எதிரணியை அதிக ரன்கள் குவிக்க வைத்ததும் மும்பை தான். தொடர் தோல்விகள் மற்றும் மோசமான சாதனைகளால், மும்பை ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடந்த இத்தேர்வை, 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வுக்கான விடைத்தாளை திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டன. இப்பணியில் 46,000 முதுநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரங்களில், நல்லிணக்கத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பேசுவதாக அமைச்சர் உதயநிதி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் மீது அவதூறு வார்த்தைகளை கூறுவது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.