India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்வே வருமானம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் சரக்குகள் கையாளுதல், பயணிகள் கட்டணம் மூலம் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி கிடைத்தது. இந்நிலையில் 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2.6 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 1,591 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியும் சாதனை படைத்துள்ளது. ரயில்வேயின் அதிகபட்ச வருவாய் இது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் தன்னை உதவி இயக்குநர்கள் ஏளனம் செய்ததாக சீரஞ்சிவி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று நினைப்பா என என்னை பார்த்து உதவி இயக்குநர்கள் ஏளனம் செய்து, சத்தம் போட்டனர். நான் இந்த அளவு வளர, சூப்பர் ஸ்டாராக வேண்டுமென்று எனக்குள் இருந்த ஒரு வெறியும் காரணம்” என்று கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்திற்கு சொந்தமான சுமார் 30 இடங்களுக்கு சீன அரசு பெயர் மாற்றம் செய்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதை மறைக்கத்தான் கச்சத்தீவு பிரச்னையை மோடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், ₹7000 கோடியை இலங்கைக்கு கொட்டி கொடுக்க தெரிந்த மோடிக்கு கச்சத்தீவை மீட்க தெரியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை பொதுமக்களிடம் கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்து ஆச்சரியப்படுத்தினார். கோவையில் போட்டியிடும் அவர், கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வீரகேரளம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு குறும்பர் இன மக்கள் கம்பளியை பரிசாக அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அண்ணாமலை கன்னட மொழியில் நன்றி தெரிவித்தார். இதனை கண்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா (74) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்றிரவு காலமானார். ஆந்திராவை சேர்ந்த இவர், 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார். ஜென்டில்மேன், சந்திரமுகி என 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு (தமிழ்-தெலுங்கு) மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்னம், ஷங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதிய இவர், கடைசியாக ரஜினியின் தர்பார் படத்திற்கு வசனம் எழுதினார்.
பெங்களூரு – லக்னோ அணிகளுக்கு இடையேயான 15ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், எந்த அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறப் போகிறது? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், பெங்களூரு அணியில் சில மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?
விருதுநகர் தொகுதிக்காக சரத்குமார், கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளதாக நடிகை விந்தியா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் யாருக்கும் கொள்கை, கோட்பாடு என்று எதுவும் இல்லை. பாமக டீலிங் ஒத்து வந்ததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். சரத்குமார் ஒரு சீட்டுக்காக கட்சியை கலைச்சிட்டார். டிடிவி, ஓபிஎஸ் பாதுகாப்புக்கு பாஜகவுடன் சேர்ந்துள்ளார்கள்” எனக் கூறினார்.
திருச்சி அருகே லாரி மீது மோதி ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், பேருந்து ஓட்டுநர், பெண் பயணி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
அனைத்தும் வாக்குகளையும் விவிபேட் சீட்டுடன் ஒப்பிடக்கோரும் மனு குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது ஒரு தொகுதியில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் மட்டும் ஒப்பிடப்படுகிறது. இந்நிலையில், அனைத்து வாக்குகளையும் ஒப்பிடக்கோரும் மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.
ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடக்கு கடற்கரைப் பகுதிகளில் மட்டும் நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதங்கள் குறித்த விவரமும் வெளிவரவில்லை.
Sorry, no posts matched your criteria.