News April 2, 2024

மார்ச்சில் யுபிஐ மூலம் ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம்

image

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல விரும்பாதோர் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். இதுபோல மார்ச்சில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,344 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும், ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பதும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது.

News April 2, 2024

பாஜக மீது பிரசாந்த் கிஷோர் பரபரப்பு குற்றச்சாட்டு

image

பாஜக உளவியல் போரில் ஈடுபட்டிருப்பதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த தேர்தலை விட பாஜகவால் கூடுதலாக 10-20 தொகுதிகளில் வெல்ல முடியும். ஆனால் 370 இடங்களில் பாஜக மட்டும் வெற்றி பெறும் என கூறுவது, ஒரு உளவியல் போர் ஆகும். இதனால் பொதுமக்களின் கண்ணோட்டத்தை, பாஜக ஜெயிக்குமா, தோற்குமா என்பதிலிருந்து, 370ஐ கைப்பற்றுமா, இல்லையா என்பதற்கு மாற்றிவிட்டது” என்றார்.

News April 2, 2024

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் த்ரிஷா

image

அல்லு அர்ஜூனை வைத்து அட்லி இயக்கவுள்ள புதிய படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு முன்னணி நடிகர்களுடன் த்ரிஷா தொடர்ந்து நடித்து வருகிறார். லியோ, விடாமுயற்சியை தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லாலுடன் ’ராம்’, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ என கமிட் ஆகி உள்ளார். தமிழை கடந்து மற்ற மொழி படங்களிலும் த்ரிஷாவின் கிராப் உயர்ந்துள்ளது.

News April 2, 2024

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிமுக

image

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பர யுக்தி அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனால், தனி மெஜாரிட்டி உடன் திமுக வெல்லும் என்ற இடங்களில் இருமுனை போட்டியாக மாறி வருகிறது. அதிமுக இன்னும் பிரசாரத்தை தீவிரப்படுத்தினால், நிலைமை இன்னும் கடுமையாகும்.

News April 2, 2024

டி20 உலகக்கோப்பை அணி கீப்பர் இடத்துக்கு 5 பேர் போட்டி

image

டி20 உலக கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு 5 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் தேர்வு செய்யப்படவுள்ளது. தற்போது ஜிதேஷ் சர்மா, இசான் கிஷண், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுலுக்கு மாறி மாறி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பண்டும் களத்தில் குதித்திருப்பதால், கீப்பர் இடத்துக்கு தேர்வாவதில் 5 பேர் இடையே போட்டி நிலவுகிறது.

News April 2, 2024

வரலாற்று உண்மைகளை யாராலும் மாற்ற முடியாது

image

அருணாச்சல் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை யாரும் மறுக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவின் 30 நிலப்பரப்புக்கு சட்டவிரோதமாக சீனா பெயரிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. சீனா வரலாற்று உண்மைகளை மாற்ற முடியாது. இந்தியாவின் அங்கமாக அந்த மாநிலமும், மக்களும் இருக்கிறார்கள். பொய்களை கட்டவிழ்த்து விடுவதை சீனா தொடர்ந்து செய்து வருகிறது என X-இல் அவர் கூறியுள்ளார்.

News April 2, 2024

ரூ.1,00,000 வரை எடுத்துச் செல்லலாம்

image

பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் ரூ.1 லட்சம் வரையும், வேட்பாளா்கள் ரூ.50,000 வரையும் எடுத்துச் செல்லலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளா்கள் மட்டுமின்றி, அவா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பேச்சாளா்களின் செலவுக் கணக்கும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மேல் எடுத்துச் செல்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணமும் பறிமுதல் செய்யப்படும்.

News April 2, 2024

வெயில் கூடுதலாக இருக்கும்

image

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில், பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தைவிட வெயில் கடுமையாக இருக்கும். வழக்கமாக 4 முதல் 8 நாள்கள் வரை நீடிக்கும் வெப்ப அலையின் தாக்கம், நடப்பாண்டில் 10 முதல் 20 நாள்கள் வரை நீடிக்கும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

BREAKING: T.R.பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறார்?

image

திமுகவின் மூத்த தலைவர் T.R.பாலுவின் மகள் T.R.B.மனோன்மணி பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் T.R.பாலுவின் முதல் தாரத்து மகள். அமைச்சர் T.R.B ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிருந்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இருக்கும் நிலையில், T.R.B.மனோன்மணியும் பாஜகவில் இணைவது திமுகவுக்கு நெருக்கடியாக மாறும்.

News April 2, 2024

ரயில்வே வருமானம் புதிய உச்சம்

image

ரயில்வே வருமானம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் சரக்குகள் கையாளுதல், பயணிகள் கட்டணம் மூலம் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி கிடைத்தது. இந்நிலையில் 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2.6 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 1,591 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியும் சாதனை படைத்துள்ளது. ரயில்வேயின் அதிகபட்ச வருவாய் இது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!