News April 2, 2024

கள்வன் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும்

image

கள்வன் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். ஆக்‌ஷன், அட்வென்ச்சர், எமோஷன் என அனைத்தும் கலந்து கலவையான இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், குடும்பமாக வந்து படத்தை தாராளமாக என்ஜாய் பண்ணலாம் எனக் கூறினார்.
ஜி.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் இப்படம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ்-க்கு இப்படம் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 2, 2024

கச்சத்தீவு விவகாரம்: திமுக – பாஜக துரோகிகள்

image

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் பாஜக இருவருமே துரோகிகள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 20,000 புத்தகங்களை படித்த அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது என கிண்டலடித்த அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

News April 2, 2024

பிரதமரின் வாகனப் பேரணிக்கு தடை போடும் காவல்துறை?

image

சென்னையில் வாகனப் பேரணி நடத்த காவல்துறை அனுமதி தர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வரும் 9ஆம் தேதி சென்னை வரும் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே கோவையில் வாகனப் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றம் சென்று பாஜக அனுமதி பெற்றது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் காவல்துறை அனுமதி வழங்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

News April 2, 2024

ராஜஸ்தானிடம் தோல்வியடைய இதுவே காரணம்

image

ராஜஸ்தானிடம் மும்பை அணி தோல்வியடைய தொடக்க ஆட்டக்காரர்களின் மோசமான ஆட்டமே காரணமென கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “உண்மையிலேயே போட்டி கடினமாக இருந்தது. பேட்டிங் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. விக்கெட்டுகள் விழுந்தபடி இருந்தது. அதிரடியாக விளையாட நினைத்தேன். ஆனால் முடியவில்லை ” என்று கூறினார்.

News April 2, 2024

மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிவித்தது ஜியோ

image

4ஜி பயனாளர்களுக்காக மிகக்குறைந்த விலையில் 56 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. சாதாரண 4ஜி போன்கள், ஜியோ பாரத் போன்கள் என 2 வகையான திட்டங்களை ஜியோ அளித்து வருகிறது. இதில் ஜியோ பாரத் போன் பயனாளர்களுக்கு ₹ 234 விலையில் 56 நாள் வேலிடிட்டியுடன் 28 ஜிபி டேட்டா, வரம்பற்ற அலைபேசி வசதி, மாதத்துக்கு 300 எஸ்எம்எஸ் கொண்ட திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது.

News April 2, 2024

சற்றுமுன்: பாஜகவில் மோதல் வெடித்தது

image

கர்நாடக பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சமடைந்துள்ளதால், பெங்களூரு வந்துள்ள அமித் ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். ஷோபா கரந்தலஜேவுக்கு எதிராக சதானந்தா கவுடா ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சிக்கமங்களூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அண்ணாமலையின் நண்பர் சி.டி.ரவி, மைசூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரதாப் சின்ஹாவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

News April 2, 2024

பாஜகவுக்கு வாக்களிக்கிறோம்

image

தேர்தல் நேரத்தில் மட்டும் பாஜகவுக்கு கச்சத்தீவு ஞாபகம் வருகிறதா? என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். நாங்களே பாஜகவுக்கு வாக்களிக்கிறோம் என்று சூளுரைத்தார். முன்னதாக, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளனர்.

News April 2, 2024

2 மாதங்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு கொண்டாட்டம்

image

தேர்தல் ஆணைய நடவடிக்கையால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1,100 சுங்கச் சாவடிகளில் 3-5% கட்டண உயர்வு நேற்று அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அதனை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஜூன் 4 வரை நிறுத்தி வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த 2 மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 2, 2024

BIG BREAKING: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்.25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஆட்சியர்கள் கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.

News April 2, 2024

ரூ.75,000 கடக்கப்போகும் தங்கம்? அதிர்ச்சி தகவல்

image

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண் பிள்ளை வைத்திருக்கும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் வாங்குவது கடினமான காரியமாக மாறி வருகிறது. இந்நிலையில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கம், நடப்பு ஆண்டு இறுதிக்குள் ரூ.75,000-ஐ கடக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 கிராம் தங்கம் ரூ.11,000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!