India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குப்பை தொட்டியாக கடலூர் மாவட்டத்தை மாற்றியுள்ளார்கள் என தங்கர் பச்சான் விமர்சித்துள்ளார். இந்த தொகுதியில் என்ன பிரச்னை, எதை சரி செய்ய வேண்டும் என என்னை விட மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அவர், இந்த மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் தன்னை எம்.பியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், இட ஒதுக்கீடு குறித்து பேச பாமகவை தவிர யாருக்கும் தகுதியில்லை எனக் கூறினார்.
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்சமாக 39 – 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக தமிழ்நாடு வரும் அவர், ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரியில் அவர் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கணிசமான வாக்குகளை பெற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கச்சத்தீவு பிரச்னையில் திமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துவதாக அதிமுக எம்பி சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘கச்சத்தீவு குறித்து பேச பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை. மீனவர்களை விரட்டும்போது கச்சத்தீவு பிரச்னை தெரியவில்லையா? 10 ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் நேரத்தில் பேசுவதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல நடிகர் விக்னேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். ‘பிதாமகன்’ படத்தில் லைலாவின் தந்தையாக நடித்திருந்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது உடல் சிறுசேரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாமல் விஸ்தாரா நிறுவனம் நேற்று மட்டும் 50 விமானங்களை ரத்து செய்துள்ளது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். இன்றும் 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா உடன் விஸ்தாராவை இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இருப்பினும், தினந்தோறும் நிலைமை மோசமடைவதால் தினசரி ரிப்போர்ட் தருமாறு டிஜிசிஏ கேட்டுள்ளது.
அடுத்த பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் மீது வலுவான தாக்குதல் நடைபெறும் என மோடி கூறியுள்ளார். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை என்ற அவர், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யவே பொறுப்புக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். ஊழல்வாதிகள் தன்னை மிரட்டுவதோடு, அவதூறு செய்வதாக வருத்தப்பட்ட அவர், புதிய ஆட்சியில் ஊழல்வாதிகள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று உறுதியளித்தார்.
மதுபான கொள்கை வழக்கில் ED கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மதுபான வழக்கில் இதுவரை கெஜ்ரிவால் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் ஆளாக இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங் 6 மாதமாக சிறையில் இருந்து வந்தார். இதே வழக்கில் கைதாகி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் சிறையில் உள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ₹ 12 கோடி சம்பளம் வாங்குகிறார். முன்னாள் உலக அழகியான இவர், தமிழில் இருவர், ஜீன்ஸ், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களிலும், இந்தியில் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 50 வயதாகும் நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். அவருக்கு ₹ 776 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் ₹ 21 கோடி மதிப்பிலான துபாய் சொகுசு பங்களாவும் அடங்கும்.
3ஆவது முறையாக ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக தற்போது எடுத்துள்ளதை விட, மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் 3வது முறையாக தனது அரசு ஆட்சியமைக்க இன்னும் சில நாள்களே இருப்பதாகவும், அதுபோல் மீண்டும் ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.