News April 2, 2024

இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓபிஎஸ்

image

ராமநாதபுரம் தொகுதியின் பரமகுடி பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது தவறுதலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட அவர், பழக்க தோஷத்தில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டுவிட்டதாக கூறினார். பின்னர், பலா சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தை மீட்கவே போராடுவதாக பேசினார்.

News April 2, 2024

சாதித்தார் குயின்டன் டி காக்

image

ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களை (99 போட்டிகள்) கடந்த 6-வது வீரர் என்ற சாதனையை டி காக் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் அவர், RCB-க்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி 81 ரன்களை குவித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார். முன்னதாக கெயில் (75 போட்டிகள்), கே.எல்.ராகுல் (80), பட்லர் (85), வார்னர் (94), டூ பிளெஸிஸ் (94) ஆகியோர் 3,000 ரன்களை கடந்துள்ளனர்.

News April 2, 2024

கடைசி இரண்டு ஓவரில் மரண அடி

image

RCB-க்கு எதிரான போட்டியில் லக்னோ அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடி வந்தது. ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்ததும் ரன் சரியத் தொடங்கியது. ஆனால், கடைசியில் களமிறங்கிய பூரண், கடைசி 2 ஓவர்களில் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதில் ஒரு சிக்ஸர் 106 மீ தூரம் சென்றது. இன்று அடித்த 5 சிக்ஸர்களுடன் சேர்த்து IPL தொடரில் 103 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரது அதிரடியால் LSG 181/5 ரன்கள் எடுத்துள்ளது.

News April 2, 2024

கொலை மிரட்டல் விடுத்தாரா சரண்யா பொன்வண்ணன்?

image

நடிகை சரண்யா பொன்வண்ணன் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்ததில், பொய் புகார் என தெரியவந்துள்ளது. பார்க்கிங் தொடர்பாக சரண்யாவின் உறவினருக்கும் ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தம் இல்லாமல் சரண்யா மீது புகார் அளித்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

News April 2, 2024

பஞ்ச் டயலாக் பேசி பிரசாரம் செய்த கமல்

image

தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும் தனக்கும் உள்ள காதல் சாதரண காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழகம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் தான் சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்துள்ளேன் என்றார்.

News April 2, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

image

ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கை ரேகைப் பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகைப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31உடன் முடிவடைந்த நிலையில் பதிவு செய்யாதவர்கள் பொருட்கள் வாங்க முடியாது என்று தகவல் வெளியானது. கூட்டுறவுத் துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

News April 2, 2024

RCB-க்கு 182 ரன்கள் இலக்கு

image

பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 181/5 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய LSG வீரர்கள் பின்னர் வரிசையாக ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக டி காக் 81, பூரண் 40* ரன்கள் எடுத்தனர். RCB தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 182 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் இன்னும் சற்று நேரத்தில் RCB அணி களமிறங்க உள்ளது.

News April 2, 2024

புலிப்பாண்டியா? எலிப்பாண்டியா?

image

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தபோது புலிப்பாண்டி இபிஎஸ், எலிப்பாண்டியாக இருந்தாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சிஏஏ உள்பட பல்வேறு சட்டங்களை பாஜகவுடன் இணைந்து ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதை எதிர்த்து பேசுவதாகக் கூறிய அவர், தேர்தல் காரணமாக சிறுபான்மையினர் மீது திடீரென பாசத்தை காட்டி வருவதாக காட்டமாக விமர்சித்தார்.

News April 2, 2024

பாண்டியாவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் ஆதரவு

image

தனியாக விடப்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வீரர்கள் கேப்டனாக ஏற்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதேபோல, வீரர்கள் சேர்ந்து விளையாடினால் தான் வெல்ல முடியும் என நவ்ஜோத் சிங் சித்துவும், ரோகித் மற்றும் பும்ரா ஆகியோர் பாண்டியாவை குழப்ப முயற்சிப்பதாக அம்பத்தி ராயுடுவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக MI கேப்டன் பாண்டியாவுக்கு சக வீரர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

News April 2, 2024

அதிக வாக்குகள் பெற்றுத்தருவோருக்கு பரிசு

image

திருச்சி மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் அதிமுக நகர செயலாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து பேசிய அவர், ‘தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசளிக்கப்படும்’ என்றார்.

error: Content is protected !!