News April 3, 2024

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

‘குக் வித் கோமாளி’ புகழ் நாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குழந்தைகளைக் கவரும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News April 3, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 124
▶குறள்: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
▶விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாமல், அடக்கத்துடன் வாழ வேண்டும். அப்படி வாழ்பவரது மனது, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

News April 3, 2024

₹12,000 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே

image

ரயில் சேவைகள் மூலம் 2023-24ஆம் நிதியாண்டில், ₹12,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 10% அதிகமாகும். பயணிகள் ரயில் சேவை மூலம் ₹7,151 கோடி, சரக்கு ரயில்கள் மூலம் ₹3,674 கோடி, இதர வருவாய் மூலம் ₹1,194 கோடி வசூலாகியுள்ளது. இதுதவிர, பாரத் கவுரவ் ரயில்கள் மூலம் ₹34 கோடி, ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம் ₹20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

News April 3, 2024

கச்சத்தீவு விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

image

கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். “தன்னை எல்லாம் தெரிந்தவர் என்று சொல்லும் அண்ணாமலை, கச்சத்தீவு பற்றி எப்படி படிக்காமல் இருந்தார்?. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி எப்படி தெரியாமல் போனது? இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவையா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 3, 2024

ஐபிஎல்லில் புதிய சாதனை

image

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர், தனது முதல் போட்டியிலேயே 156.7 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தினார். இதனால் கவனம் ஈர்த்த அவர், நேற்றைய போட்டியில் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை மணிக்கு 155+ கி.மீ வேகத்தில் பந்துவீசிய பவுலர் என்ற பெருமையை பெற்றார்.

News April 3, 2024

41 டிகிரியை தொட்டது வெயில்

image

தமிழகத்தில் நேற்று 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு-41.2, வேலூர்-40.1, தருமபுரி-40, சேலம்-40.3, கரூர்-40.5, கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 39 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும், வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 3, 2024

திமுக திட்டங்கள் உலகத்துக்கே முன்னோடி

image

திமுக திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழகத்தைப் போல கனடாவிலும் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெருமிதமான தருணம். காலை உணவுத் திட்டத்தால் 16 லட்சம் குழந்தைகள் பயன் அடைகிறார்கள். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக தான் திமுக உழைக்கிறது” என கூறியுள்ளார்.

News April 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 3, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶டாஸ்மாக் கடைகளை அகற்றவே அரசியலுக்கு வந்துள்ளோம்: அண்ணாமலை
▶திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் என்னை எதிர்க்கிறார்கள்: சீமான்
▶கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, பாஜக இருவருமே துரோகிகள்: ஜெயக்குமார்
▶பாஜகவுக்கு டெபாசிட் கிடைத்தால் அதுவே பெரிய ஆச்சரியம்: முத்தரசன்
▶தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதிக்கு மாநில அரசு கணக்கு கூற வேண்டும்: நிர்மலா சீதாராமன்
▶நடிகர் விக்னேஸ்வர ராவ் காலமானார்

error: Content is protected !!