News March 16, 2024

இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்கவில்லை

image

“இயேசு”வைப் பற்றி, கனவிலும் தவறாக சித்தரிக்க மாட்டேன் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ரோமியோ பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில், மது பழக்கம் தொடர்பாக “இயேசு” குறித்து அவர் தவறாக பேசியதாக சர்ச்சையானது. இதனால், கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தவறாக எதுவும் சொல்லவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், தனது கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் எப்போது?

image

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நேரத்தில் மக்களவை, சட்டசபை தேர்தல் நடத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆதலால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும், அங்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

News March 16, 2024

மார்ச் 18ஆம் தேதி CSK-RCB போட்டிக்கான டிக்கெட்

image

ஐபிஎல் 17ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 18ஆம் தேதி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் விலை ₹1,700-ல் இருந்து ₹7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என CSK நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News March 16, 2024

பாஜகவில் இருந்து விலகினார்!

image

தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று ம.பி, மாநில மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் விலகியதாக கூறியுள்ளார். தேர்தலில் சீட் கொடுக்காததாலேயே கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது

News March 16, 2024

இதை செய்தால் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்

image

Form 12 D விண்ணப்பத்தை நிரப்பியளித்தால், வீட்டில் இருந்து 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர். அவர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாள்களுக்குள் விண்ணப்பத்தை அளித்தால், வீட்டில் இருந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News March 16, 2024

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டது

image

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து X-ல் பதிவிட்டுள்ள அவர், NDA கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகிவிட்டது எனக் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் நல்ல நிர்வாகம், நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

வதந்திகள் சவாலாக உள்ளன

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் வதந்திகளை கட்டுப்படுத்துவது சவாலாக இருப்பதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த கட்சிகள் தொடர்பாகவோ, வேட்பாளர்கள் தொடர்பாகவோ விமர்சனம் செய்யலாம், ஆனால் பொய் செய்திகளை பரப்பக் கூடாது என்று வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொய் செய்திகள் குறித்து அவ்வப்போது விளக்கமும் அளிக்கப்படவுள்ளது.

News March 16, 2024

நடிகை கிருத்தி கர்பந்தாவுக்கு திருமணம் முடிந்தது

image

பிரபல நடிகை கிருத்தி கர்பந்தாவுக்கு அவரது நீண்ட நாள் காதலர் புல்கிட் சாம்ராட் உடன் இன்று திருமணம் முடிந்தது. இவர்களது திருமணம் ஹரியானா மாநிலம் மானேசரில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. பஞ்சாபி முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள கிருத்தி தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘புரூஸ் லீ’ படத்தில் நடித்திருந்தார்.

News March 16, 2024

தமிழ்நாட்டில் அவசர கதியில் தேர்தலா?

image

தமிழ்நாட்டில் அவசர கதியில் தேர்தல் நடத்தப்படவில்லை என்று சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்.19ல் நடத்தப்படவுள்ளது. இதற்கான மனு தாக்கல் தொடங்க 4 நாள்களே உள்ளன. இதனால் அவசர கதியில் தேர்தல் நடத்தபடுகிறதா எனக் கேட்கப்பட்டது. இதற்கு, “நாடு முழுவதும் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் வைத்தே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கதியில் நடத்தப்படவில்லை” என பதிலளித்தார்.

News March 16, 2024

அமலாக்கத்துறை 7 நாள்கள் விசாரிக்க அனுமதி

image

தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவை, மார்ச் 23 வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று மாலை ED அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் தனது உடல்நிலையை பரிசீலிக்க வேண்டும் என கவிதா தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

error: Content is protected !!