India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் 54 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி இன்றுடன் நிறைவடைகிறது. அதில், மன்மோகன் சிங்கின் 33 ஆண்டு கால நாடாளுமன்ற பதவியும் முடிவுக்கு வருகிறது. 1991-2019ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019ஆம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றுள்ளார். மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, ராஜஸ்தான் எம்.பி.யாக சோனியா காந்தி பதவியேற்கிறார்.
கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென விடுதியில் தீப்பிடிக்க, சில நொடிகளிலேயே கண் இமைக்கும் நேரத்தில் அந்த விடுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் உள்பட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லி – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான 16ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி, 3ஆவது போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியுடன் டெல்லி மோதுவதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. யார் வெற்றி பெறுவார்?
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், மாற்று கட்சியினர் பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியனும் தனது தொண்டர்களுடன் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
▶கச்சத்தீவு பிரச்னையில் திமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகிறது: சி.வி சண்முகம்
▶அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது
▶அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை 10% உயர்ந்துள்ளது.
▶அரசியல் ஆதாயத்திற்காகவே கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்: இபிஎஸ்
▶தேர்தல் வந்ததும், சில பார்ட் டைம் அரசியல்வாதிகள் வருகிறார்கள்: ஸ்டாலின்
▶ஐபிஎல்: பெங்களூரு அணி தோல்வி
தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக SBI துணைப் பொது மேலாளர் எம்.கண்ணா பாபு கூறிய போது, “இந்தத் தகவலை வெளியிடுவது 3ஆம் தரப்பினரின் போட்டி நிலைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆா்டிஐ சட்டப் பிரிவு 8(1) (D)-இன் கீழ் பொது வெளியில் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் விளையாடுகிறது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தருமபுரியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “முதல்வர் ஸ்டாலின் பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. அதை தடுக்க திறமையில்லாத பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம், நாளை திரைக்கு வரவுள்ளது. இதில் பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யானை வேட்டையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்திற்கு, ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.
▶ஏப்ரல் – 3, பங்குனி – 21 ▶கிழமை – புதன்
▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30 PM – 5:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM
▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM
▶குளிகை நேரம்: 10:30 AM – 12:00 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: திதித்துவம்
▶நட்சத்திரம்: 9:47 PM வரை உத்திராடம் பிறகு திருவோணம்
பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ஐபிஎல் தொடரில் அறிமுகமான 2ஆவது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இதுவரை எந்தவொரு வீரரும், ஐபிஎல்லில் அறிமுகமான 2ஆவது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை பெற்றதில்லை.
Sorry, no posts matched your criteria.