News April 3, 2024

அதிமுகவை வீழ்த்துவார்களா EX அதிமுகவினர்

image

நாடாளுமன்றத் தேர்தல் அதிமுக வேட்பாளர்களை வீழ்த்த, திமுக, பாஜக போன்ற கட்சிகள் முன்னாள் அதிமுகவினரை தான் களமிறக்கி இருக்கின்றன. தேனி – தங்கம் தமிழ்ச்செல்வன் & டிடிவி, நெல்லை- நயினார், சேலம்- செல்வகணபதி , கரூர் – செந்தில்நாதன், வேலூர்- ஏ.சி. சண்முகம், அரக்கோணம் -ஜெகத்ரட்சகன், நாமக்கல்- கே.பி.ராமலிங்கம், கோவை-ராஜ்குமார், திருச்சி- செந்தில் நாதன், ராமநாதபுரம்-ஓபிஎஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

News April 3, 2024

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

தைவானின் தலைநகர் தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தைவானின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதி மக்கள் உடனே அங்கிருந்து வெளியேறுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2024

மிகப்பெரிய லிங்கத்தை கொண்ட பிரகதீஸ்வரர் ஆலயம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டிடக் கலை பல அதிசயங்களை கொண்டது. குறிப்பாக,13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய லிங்கம் இந்த கோயிலில் உள்ளது. கோயிலின் கருவறையின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை உண்டாக்கும் சிறப்புடையது.

News April 3, 2024

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்

image

நாடு முழுவதும் 54 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி இன்றுடன் நிறைவடைகிறது. அதில், மன்மோகன் சிங்கின் 33 ஆண்டு கால நாடாளுமன்ற பதவியும் முடிவுக்கு வருகிறது. 1991-2019ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019ஆம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றுள்ளார். மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, ராஜஸ்தான் எம்.பி.யாக சோனியா காந்தி பதவியேற்கிறார்.

News April 3, 2024

கேளிக்கை விடுதியில் தீ விபத்து; 29 பேர் உடல் கருகி பலி

image

கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென விடுதியில் தீப்பிடிக்க, சில நொடிகளிலேயே கண் இமைக்கும் நேரத்தில் அந்த விடுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் உள்பட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News April 3, 2024

IPL: ஹாட்-ட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா?

image

டெல்லி – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான 16ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி, 3ஆவது போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியுடன் டெல்லி மோதுவதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. யார் வெற்றி பெறுவார்?

News April 3, 2024

அதிமுகவில் இணைந்த காங்., முன்னாள் எம்எல்ஏ

image

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், மாற்று கட்சியினர் பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியனும் தனது தொண்டர்களுடன் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

News April 3, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶கச்சத்தீவு பிரச்னையில் திமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகிறது: சி.வி சண்முகம்
▶அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது
▶அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை 10% உயர்ந்துள்ளது.
▶அரசியல் ஆதாயத்திற்காகவே கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்: இபிஎஸ்
▶தேர்தல் வந்ததும், சில பார்ட் டைம் அரசியல்வாதிகள் வருகிறார்கள்: ஸ்டாலின்
▶ஐபிஎல்: பெங்களூரு அணி தோல்வி

News April 3, 2024

வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI மறுப்பு

image

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக SBI துணைப் பொது மேலாளர் எம்.கண்ணா பாபு கூறிய போது, “இந்தத் தகவலை வெளியிடுவது 3ஆம் தரப்பினரின் போட்டி நிலைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆா்டிஐ சட்டப் பிரிவு 8(1) (D)-இன் கீழ் பொது வெளியில் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

News April 3, 2024

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

image

திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் விளையாடுகிறது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தருமபுரியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “முதல்வர் ஸ்டாலின் பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. அதை தடுக்க திறமையில்லாத பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!