India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் இன்று விமான மூலம் இலங்கை செல்கின்றனர். திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு காவல்துறை வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 3 பேரும் இன்று காலை 10 மணிக்கு இலங்கை செல்லும் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 இல் தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் காணொளி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் மகன் கரண் அதானிக்கு காவேரி என்ற 14 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முதன் முதலாக தனது பேத்தியின் படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அதானி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், தனது பேத்தி கண்களின் பிரகாசத்துடன் ஒப்பிடும்போது உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் மங்கலாகவே தெரிவதாகவும், தனது மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக பேத்தி உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்பு தான் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களுக்கு சம்பளம் ரூ.25 உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய கூட்டத்திற்கு பின்பும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஓபிஎஸ், டிடிவி, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், குஷ்பு உள்ளிட்ட 40 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.
மக்களவைத் தோ்தல் முடிந்த பின்பு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சா் உதயநிதி கூறியுள்ளார். “மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1.17 கோடி மகளிருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இது பெரிய திட்டமாக இருப்பதால் குறைகள் விரைவில் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும்” என்றாா்.
RCBக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 2 போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது நல்ல உணர்வை கொடுப்பதாக அவர் கூறினார். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்றும், அந்தப் பயணத்தில் இது வெறும் தொடக்கம் என்று உணர்வதாகவும் மயங்க் தெரிவித்தார்.
விஜய் சிறந்த பேச்சாளராக இருப்பதால், அரசியல் கட்சி தலைவருக்கான முதல் தகுதியை அடைந்துவிட்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். மக்களுக்கு என்ன தேவை என்பதை ஒரு தலைவன் புரிந்திருக்க வேண்டும், அதை விஜய் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர், விஜய் அரசியலில் அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை பார்க்க மிக ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு பேசியதாக சித்தராமையா மகன் யதீந்திரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரையின் போது, அமித் ஷாவை குண்டர், ரவுடி, அவர் மீது குஜராத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார் என பேசியிருந்தார். மேலும், பிரதமரையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 4 தொகுதிகளை குறிவைத்து, பிரதமர் மோடி 4 நாள்கள் பரப்புரை மேற்கொள்கிறார். இதில் 9ஆம் தேதி தென்சென்னை வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பிரசாரம் செய்யும் மோடி, 10ஆம் தேதி அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையிலும், கூட்டணி வேட்பாளரான பாரிவேந்தரை ஆதரித்து 13ஆம் தேதி பெரம்பலூரிலும், ராதிகா சரத்குமாரை ஆதரித்து 14ஆம் தேதி விருதுநகரிலும் வாக்கு சேகரிக்கிறார்.
Sorry, no posts matched your criteria.