India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் தனியார் யூடியூப் சேனலின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், ‘மக்களவைத் தேர்தல் நேரத்தில் I.N.D.I.A கூட்டணி என்பது பொழுது போக்கு மட்டுமே. மதசார்பின்மை என்ற பெயரில், பெரும்பான்மை மக்களின் மதத்தை கேவலமாக பேசுகின்றனர் ’ என்றார்.
விஜய் டிவியின் பிரபல ‘நீயா நானா’நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கோபிநாத், நடப்பு ஐ.பி.எல் சீசனில் கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். ஊடகத்தில் 25 ஆண்டுகளை தாண்டிவிட்ட அவருக்கு, கிரிக்கெட் களத்திலும் ஒருகை பார்க்க தயாராகி வருகிறார். ஏற்கெனவே விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கலக்கி வரும் நிலையில், கோபிநாத்தும் அதில் இணையவுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.ஆர்.எஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவின் காவல் மார்ச் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவரை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ED கோரிக்கையை ஏற்று, மார்ச் 23 வரை கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதியளித்தது.
➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤ 1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுகவுக்கு தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள், 2026 தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பார்க்கலாம். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் திமுகவுக்கு கோபம். அதிமுகவுக்கு இப்போது ரூட் கிளியர்’ என்றார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வியடைந்தார். பர்மிங்காமில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தோனேசியா வீரர் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்ட சென், முதல் செட்டில் 12-21 என்ற கணக்கில் பின் தங்கினார். 2ஆவது செட்டை 21-10 என கைப்பற்றிய சென், வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவதுசெட்டில் 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
தமிழகம், கர்நாடகாவை தொடர்ந்து இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படும் ரோடமைன் – பி ரசாயனத்தால் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அங்குள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நச்சுப்பொருள் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து, இமாச்சலில் ஓராண்டுக்கு பஞ்சு மிட்டாய் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: இனியவை கூறல்
◾குறள்: 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
◾விளக்கம்: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறித்து விடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். பிருத்விராஜ், அமலாபால் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நேரம் தேவைப்படும் விஷயங்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.