India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தைவான் நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிலநடுக்கத்தால் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த சோக சம்பவத்திலிருந்து தைவான் மக்கள் மீண்டு வர ஒத்துழைப்போம் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
தொடர் தோல்வியையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா மீண்டும் கேப்டனாகலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஆனால், மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோஹித்திடம் வழங்க நிர்வாகம் தயங்காது என்று திவாரி கூறியிருக்கிறார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் அமித் ஷா. மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆயுட்காலம் முடியும் வரை சிறையில் இருக்கும் அளவுக்கு செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கரூர் பிரசாரத்தில் பேசிய அவர், செந்தில் பாலாஜியின் பினாமிகள் தமிழகம் முழுவதும் 3,000 பார்களில் கள்ள மதுவை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவில் ஊழல் செய்வதிலும், போதைப் பொருளை விற்பதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 5ஆம் தேதி SRH அணிக்கு எதிரான IPL போட்டியில் CSK வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் விளையாட மாட்டார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் அமெரிக்காவில் நடக்கிறது. இதற்கான விசா எடுப்பதற்காக அவர், வங்கதேசம் சென்றுள்ளார். இதனால் SRH-க்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் எனவும், ஏப்.7இல் மீண்டும் அணிக்கு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம், நாளை (ஏப்.5) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகிறது. ‘குணா’ குகையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளத்தில் 200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 60 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தை இன்று நள்ளிரவு 12 மணி முதல் OTT இல் காணலாம்.
மத்திய அரசிடம் பணம் உள்ளது, ஆனால் தமிழக அரசுக்கு தர மனம் தான் இல்லை என பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை பிரசாரத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும், அவரது குழப்பம் ஜூன் 4ஆம் தேதி தெளிந்துவிடும் எனவும் கூறினார். மேலும், தமிழகத்திற்கு செய்த சிறப்புத் திட்டம் என்ன எனக் கேட்டும் பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
டெல்லி அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி வரும் கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பல சாதனைகள் படைத்துள்ளார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 75 ரன்கள் எடுத்ததே நரைனின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்நிலையில், இன்று 85 ரன்கள் எடுத்த நரைன், தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். மேலும், நடப்பு சீசனில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ரியான் பராக்கின் (84) சாதனையையும் முறியடித்துள்ளார்.
பாஜக – பாமக கூட்டணி நள்ளிரவுக் கூட்டணி என CPI மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். பாஜகவால் 3ஆவது முறையாக ஆட்சிக்கு வர முடியாது எனக் குறிப்பிட்ட அவர், பாஜக ஆட்சியை மக்கள் அகற்றாவிட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும் என எச்சரித்தார். மேலும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய ED, IT, CBI அமைப்புகள் தற்போது பிரதமர் மோடியின் கட்டளைக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை எம்.பி. நிதி ரூ.17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ரூ.5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சரவணன் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள சு.வெங்கடேசன், ரூ.16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.