India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 125
▶குறள்: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
▶விளக்கம்: பணிவு என்னும் பண்பு, எல்லோருக்கும் நன்மை பயக்கும். அதனால், ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு மேலும் ஒரு செல்வமாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை படம் பிடித்து புகார் செய்வதற்கு, சி-விஜில் (cVIGIL) என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் 16ஆம் தேதியில் இருந்து, இந்த செயலி மூலம் பலர் புகார்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை 2,193 புகார்கள் இந்த செயலிக்கு வந்துள்ளன. அவற்றில் 1,694 புகார்களின் உண்மைத் தன்மை அறியப்பட்டு ஏற்கப்பட்டன. அதிகபட்சமாக கரூர்-372, சென்னை-209 புகார்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அதிமுக இல்லையென்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்குகிறது. ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது, அதற்கு நான் பொறுப்பு. உரிமைத் தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
இன்று (ஏப்ரல் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
சென்னை – நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 25ஆம் தேதி வரை (வியாழக்கிழமைகளில்) சென்னை எழும்பூரில் இருந்து காலை 05.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
பிரதமர் மோடி, தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “பாஜக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும். அரசியல் சட்டம் காக்க, பாஜக அரசை முதலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இது ஏப்ரல் மாதம் தான், பிரதமர் மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும்” எனத் தெரிவித்தார்.
இன்று (ஏப்ரல் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்: வணிகர் சங்கங்கள் பேரமைப்பு
▶₹2000 கோடி வெள்ள நிவாரணம் வழங்க கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
▶ஆபரணத் தங்கத்தின் விலை ₹52,000
▶பெரியார் மண்ணில் பாஜகவின் வேஷம் எடுபடாது: அன்பில் மகேஷ்
▶முதல்வர் ஸ்டாலினை 10 கி.மீ. ரோடு ஷோ வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்?: அண்ணாமலை
▶மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்
டெல்லிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிய கொல்கத்தா அணி 272 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக முறை 200+ ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் KKR 4ஆவது (21 முறை) இடத்தில உள்ளது. சென்னை அணி 29 முறை, RCB 24 முறை, MI 23 முறை, பஞ்சாப் அணி 21 முறை 200+ ரன்கள் அடித்துள்ளது.
தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்த அவர், அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக அரசு கடைப்பிடிக்கும் போக்கு சரியானது இல்லை எனக் கடுமையாக குற்றம்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.