India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் மிகச்சிறந்த தபால்காரராக 1988இல் தேர்வு செய்யப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த விக்டர் தன்ராஜ் காலமானார். 1957 முதல் 1992 வரை தபால்துறையில் பணிபுரிந்த அவர், பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார். இதனால் 1988ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த தபால்காரராக தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டிசார் கால உடையை விரும்பி அணிந்து வந்த அவர், தனது 90வது வயதில் பெங்களூரில் காலமானார்.
கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு நாடாளுமன்ற ஒப்புதல் இதுவரை பெறப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 1974இல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசு தாரை வார்த்தது. இதுகுறித்த ஆர்டிஐ தகவலை அண்ணாமலை வெளியிட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு ஆதாரம் இல்லை என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தம் என்பது ஒரு கட்சியின் நிலைப்பாடு மட்டுமல்ல, தேசத்தின் நிலைப்பாடு என்றார். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றமும் இதுகுறித்து தெளிவான முடிவெடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பநிலை 39-41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம். குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளேயே இருக்கவும்.
பீஹாரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் 22 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் வேறு கட்சியில் இருந்து வருவோருக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக ராஜினாமா செய்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிருப்தி தலைவர்கள் I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
நீலகிரி அதிமுகவின் கோட்டை என்பதை பொதுமக்கள் நிரூபித்து காட்ட வேண்டும் என இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி வேட்பாளர் லோகேஷை ஆதரித்து பேசிய அவர், ஜெயலலிதா நீலகிரிக்கு அடிக்கடி வந்து சென்ற ஒரே காரணத்திற்காக திமுக இந்த மாவட்டத்தை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார். மேலும், காற்றில் ஊழல் செய்த ஆ.ராசா தேர்தலுக்கு பிறகு எங்கு இருப்பார் என்று கூற முடியாது என்றும் இபிஎஸ் விமர்சித்தார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் சுரேஷின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 75% உயர்ந்துள்ளது. பெங்களூருவில் போட்டியிடும் அவர், பிரமாணப் பத்திரத்தில் ரூ.593.04 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 2019 தேர்தலில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 338.87 கோடியாக இருந்தது. அதேபோல் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வெங்கடரமண கவுடாவின் சொத்துமதிப்பு ரூ.633 கோடியாக உள்ளது.
இரட்டை இலை சின்னம் பலவீனமாகி வருவது இந்த மக்களவைத் தேர்தலில் தெரியவரும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் பி.எஸ்.வீரப்பாவிடமோ, நம்பியாரிடமோ இருந்தால் எப்படியோ, அப்படிதான் மக்கள் பார்ப்பதாக கூறினார். மேலும் தானும், ஓபிஎஸ்ஸும் இணைந்திருப்பதே எம்ஜிஆரின் இயக்கத்தை மீட்டு உண்மையான தொண்டர்களிடம் அதிமுகவை ஒப்படைப்பதற்காகத் தான் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நாளை ஒரே நாளில் ஏழு படங்கள் ரீலிஸ் செய்யப்பட உள்ளன. இரவின் கண்கள், ஆலகாலம், ஒரு தவறு செய்தால், டபுள் டக்கர், வல்லவன் வகுத்ததடா, கயல் ஆனந்தி நடித்த ஒயிட் ரோஸ் ஆகிய 6 நேரடி தமிழ் படங்களும், விஜய் தேவரகொண்டாவின் தி ஃபேமலி ஸ்டார் படம் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியாக உள்ளன. முன்னதாக ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா, இவானா நடிப்பில் கள்வன் திரைப்படம் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
அக்னி பிரைம் ஏவுகணையை இரவு நேரத்தில் இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. 2,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் அடுத்த தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணையை நேற்றிரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து விஞ்ஞானிகள் சோதித்தனர். அந்த ஏவுகணை திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்ததாக கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.