News April 4, 2024

திமுக, காங்கிரஸை மீனவர்கள் நம்ப மாட்டார்கள்

image

மீனவர்கள் இனிமேல் திமுக, காங்கிரஸ் கட்சிகளை நம்ப மாட்டார்கள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு பிரச்னையில் யாரும், யாரைப் பற்றியும் மாறி மாறி குறை கூற வேண்டிய அவசியம் கிடையாது எனக் கூறிய அவர், இது ஒரு வரலாற்றுப் பிழை எனத் தெரிவித்தார். மேலும், அப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்த முடிவுக்கு திமுக உடந்தையாக இருந்தது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

News April 4, 2024

APPLY NOW: இன்றே கடைசி

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 9,000 Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். Technician Gr 1 Signal – 1100, Technician Gr 3 – 7900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கணிணி தேர்வின் மூலம் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இதற்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி போன்ற தகவல்களை ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

News April 4, 2024

5079ஆம் ஆண்டு உலகம் அழியும்

image

2024ஆம் ஆண்டில் கடுமையான வானிலை மாற்றங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம் என பிரபல தீர்க்கதரிசியான பாபா வங்கா கணித்துள்ளார். இந்தாண்டு, சைபர் தாக்குதல் பெருமளவில் நடக்கும் என்றும், மிக தீவிரமான பொருளாதார நெருக்கடிகளை உலகம் எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாபா வங்காவின் கணிப்புகள் 5079ஆம் ஆண்டுடன் முடிந்து விடும் என்பதால், அப்போது தான் உலகம் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.

News April 4, 2024

தந்தை தீர்ப்பை ஆய்வு செய்யும் பெண் நீதிபதி

image

தொழிலக மதுபான வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடராமையா தீர்ப்பை அவரது மகளான உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா ஆய்வு செய்யவுள்ளார். 1989இல் வெங்கடராமையா அமர்வு, மதுபானங்களை வரையறை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டென தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை தலைமை நீதிபதி சந்திரசூட், 2027ல் தலைமை நீதிபதியாகவுள்ள நாகரத்னா உள்ளிட்டோர் கொண்ட அமர்வு ஆய்வு செய்யவுள்ளது.

News April 4, 2024

சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஷாக்

image

சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலரான முஸ்தஃபிசுர் ரஹ்மான் இம்மாத இறுதி வரை தான் CSK அணிக்காக விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச வீரரான அவருக்கு ஏப்ரல் 30 வரை மட்டுமே அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் NOC வழங்கியுள்ளது. அதன்பிறகு அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. CSK அணியில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள முஸ்தஃபிசுர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

News April 4, 2024

இருப்பை பொறுத்து தண்ணீர் திறப்போம்

image

அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29ஆவது கூட்டத்தில் கர்நாடக அரசு 3.6 TMC தண்ணீர் நிலுவை வைத்துள்ளதாக தமிழக அதிகாரிகள் கூறினர். அதற்கு பதிலளித்த கர்நாடக அதிகாரிகள் நீர் இருப்பை பொறுத்தே நாங்கள் தண்ணீர் திறப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

News April 4, 2024

அனைவருக்கும் ₹1,000 வழங்க நடவடிக்கை

image

பெண்கள் சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1,000 கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான் என உதயநிதி தெரிவித்துள்ளார். கரூரில் ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சில பெண்களுக்கு தகுதி இருந்தும் அவர்களுக்கு ₹1,000 கிடைக்கவில்லை என்பது உண்மை தான் எனக் கூறினார். மேலும், தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

News April 4, 2024

இந்தியாவில் இந்தாண்டு மாம்பழ உற்பத்தி அதிகரிக்கும்

image

இந்தியாவின் ஒட்டுமொத்த மாம்பழ உற்பத்தி, நடப்பு சீசனில் 14% வரை அதிகரித்து, 24 மில்லியன் டன்களாக அதிகரிக்குமென ICAR-CISH இயக்குநர் தாமோதரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள ஏப்ரல் முதல் ஜூன் வரை வீசும் வெப்ப அலை, மாம்பழங்கள் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மே மாதம் விவசாயிகள் போதிய நீர் அளித்து பராமரித்தால், மாம்பழங்கள் உதிர்வதை தவிர்க்கலாம்’ என்றார்.

News April 4, 2024

கச்சத்தீவு: நாடாளுமன்ற ஒப்புதல் பெறவில்லை (3)

image

கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு நாடாளுமன்ற ஒப்புதலோ, மத்திய அமைச்சரவை ஒப்புதலோ இல்லாததால் அது செல்லுமா என கேள்வியெழுந்துள்ளது. இந்தியா, வங்கதேச எல்லை ஒப்பந்தம் 1974இல் ஏற்பட்டாலும், 2015இல் மோடி அரசும், நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்த பிறகே அமலானது. ஆனால் கச்சத்தீவு விவகாரத்தில் அது நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

News April 4, 2024

கச்சத்தீவு: நாடாளுமன்ற ஒப்புதல் பெறவில்லை (2)

image

இலங்கைக்கு கச்சத்தீவை தனிப்பட்ட ரீதியில் இந்திரா காந்தி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் அப்போதைய அதிபரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகவின் அரசியல் எதிர்காலத்தை காக்க இதுபோல செய்ததாகவும், இதற்கு பதிலாக இந்தியா எந்த பிரதிபலனையும் பெறவில்லை எனவும், எதிர்காலத்தில் பிரச்னை ஏற்பட்டால் கச்சத்தீவை திரும்பத் தர வேண்டுமென வாக்குறுதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!