India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் 17ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 18ஆம் தேதி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் விலை ₹1,700-ல் இருந்து ₹7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என CSK நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று ம.பி, மாநில மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் விலகியதாக கூறியுள்ளார். தேர்தலில் சீட் கொடுக்காததாலேயே கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது
Form 12 D விண்ணப்பத்தை நிரப்பியளித்தால், வீட்டில் இருந்து 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர். அவர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாள்களுக்குள் விண்ணப்பத்தை அளித்தால், வீட்டில் இருந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து X-ல் பதிவிட்டுள்ள அவர், NDA கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகிவிட்டது எனக் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் நல்ல நிர்வாகம், நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் வதந்திகளை கட்டுப்படுத்துவது சவாலாக இருப்பதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த கட்சிகள் தொடர்பாகவோ, வேட்பாளர்கள் தொடர்பாகவோ விமர்சனம் செய்யலாம், ஆனால் பொய் செய்திகளை பரப்பக் கூடாது என்று வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொய் செய்திகள் குறித்து அவ்வப்போது விளக்கமும் அளிக்கப்படவுள்ளது.
பிரபல நடிகை கிருத்தி கர்பந்தாவுக்கு அவரது நீண்ட நாள் காதலர் புல்கிட் சாம்ராட் உடன் இன்று திருமணம் முடிந்தது. இவர்களது திருமணம் ஹரியானா மாநிலம் மானேசரில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. பஞ்சாபி முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள கிருத்தி தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘புரூஸ் லீ’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழ்நாட்டில் அவசர கதியில் தேர்தல் நடத்தப்படவில்லை என்று சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்.19ல் நடத்தப்படவுள்ளது. இதற்கான மனு தாக்கல் தொடங்க 4 நாள்களே உள்ளன. இதனால் அவசர கதியில் தேர்தல் நடத்தபடுகிறதா எனக் கேட்கப்பட்டது. இதற்கு, “நாடு முழுவதும் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் வைத்தே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கதியில் நடத்தப்படவில்லை” என பதிலளித்தார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவை, மார்ச் 23 வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று மாலை ED அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் தனது உடல்நிலையை பரிசீலிக்க வேண்டும் என கவிதா தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தேர்தல்களில் வாக்களிக்க தேவைப்படும் ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ஆதார், வங்கி/தபால் நிலைய பாஸ்புக், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டை, எம்பி/எம்எல்ஏ/எம்எல்சிக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு வாக்களிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறையை கணக்கிட்டு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
Sorry, no posts matched your criteria.