News April 5, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 5, 2024

IPL: பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் வீரர் ஷஷாங் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். நேற்றைய போட்டியில், 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என விளாசி 61 ரன்கள் குவித்த அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறுதலாக வாங்கப்பட்ட இவர், தற்போது அணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்துள்ளார். இதனால் பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

News April 5, 2024

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

image

கோடை காலத்தை முன்னிட்டு, சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து நாளை (ஏப்.5) 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

News April 5, 2024

திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

image

திமுகவில் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கு பதவி கிடைக்காது, வாரிசுகளுக்கு தான் பதவி கிடைக்கும் என இபிஎஸ் கூறியுள்ளார். கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், திமுகவும் தான். ஆனால், திமுகவினர் பொய் பேசி நீட் தேர்வை எதிர்க்கின்றனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்” எனத் தெரிவித்தார்.

News April 5, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 5, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் பேசுகிறார்: இபிஎஸ்
▶அன்புமணி ஒரு அரசியல் பச்சோந்தி: முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் விமர்சனம்
▶2026இல் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி என்பது தான் இலக்கு: அன்புமணி
▶புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி நடக்கிறது: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
▶பாஜகவை திமுக போட்டியாக கருதவில்லை: எம்.பி கனிமொழி
▶மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றார்

News April 5, 2024

கண்ட நேரத்தில் வேலை செய்வது நல்லதல்ல

image

மாறுபட்ட நேரங்களில் பல்வேறு வேலையை செய்வோர் 50 வயதை எட்டும் போது, பல்வேறு உடல், மனம் சார்ந்த ஆரோக்கிய குறைபாடுகளை எதிர்கொள்வதாக ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக 7,000 பேரின் தரவுகளை ஆய்வு செய்ததில், தினமும் அலுவலகத்தில் வழக்கமாக நேரத்தில் பணிபுரிவோரை விட, பல்வேறு ஷிப்டுகளில் பணிபுரிவோருக்கு, விரைவிலேயே அதிகளவில் மனச்சோர்வுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

News April 5, 2024

சினிமாவில் மட்டும் தான் ஹீரோக்கள் வருவார்கள்

image

‘நம் பிரச்சினைகளைத் தீர்க்க சினிமாவில் மட்டும்தான் ஹீரோக்கள் வருவார்கள். நிஜத்தில் இல்லை’ என்று இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். தனது இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படம் குறித்து பேசிய அவர், “நம்மைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தில் 40% பேர்தான் நல்லவர்கள். மீதம் இருக்கும் 60% பேர் கெட்டவர்கள் தான். அந்த நல்லவர்களை கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன் தான் இந்த‘ரத்னம்’” என்றார்.

News April 4, 2024

IPL: பஞ்சாப் த்ரில் வெற்றி

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பஞ்சாப் வீரர் ஷஷாங் சிங், பொறுப்புடன் விளையாடி 61 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். இது பஞ்சாப் அணிக்கு கிடைக்கும் 2ஆவது வெற்றி ஆகும்.

News April 4, 2024

அபுதாபியில் ₹22 கோடி வென்ற இந்தியர்

image

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஒவ்வொரு வாரமும் லாட்டரி குலுக்கல் நடைபெறுவது வழக்கம். பிக் டிக்கெட் என்ற பெயர் கொண்ட இந்த லாட்டரியில் இந்தியரான ரமேஷ், 10 மில்லியன் திர்ஹாம்கள் (சுமார் 22 கோடி ரூபாய்) வென்றிருக்கிறார். கத்தாரில் டெக்னீஷியனாக பணிபுரியும் ரமேஷ், 10 நண்பர்களுடன் சேர்ந்து இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.

error: Content is protected !!