India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல பெண்களுக்கு வரவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதற்கு திமுக எம்.பி. கனிமொழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “பெண்கள் பயன்பெறும் விதமாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. சில பெண்களுக்கு அது கிடைக்கவில்லை. தேர்தல் முடிந்தபின் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும்” என்று கூறினார்.
எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழகத்தை பாஜகவால் கைப்பற்ற முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பிரசாரத்தில் பேசிய அவர், அதிமுகவை மட்டுமின்றி தமிழகத்தின் உரிமைகளையும் பாஜகவிடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என குற்றம்சாட்டினார். மேலும், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ்ஸின் நாடகம் தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது எனவும் அவர் கூறினார்.
ஸ்பா சென்டர்களில் ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும்தான் மசாஜ் செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொழில்முறையில் மசாஜ் செய்பவர்கள் பாலின பாகுபாடு பார்க்காமல் பணியில் ஈடுபடுவதுதான் வழக்கம். ஆனால், அதனை வேறு நோக்குடன் பார்த்த மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் எலுமிச்சை பழம் விலை கிலோ ₹130 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 100 டன் எலுமிச்சை பழங்கள் கொண்டுவரப்படும். தற்போது கோடை சீசனையொட்டி தேவை அதிகரித்துள்ள சூழல் எலுமிச்சை வரத்து 40 டன்னாக குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்பனையில் கிலோ ₹100, சில்லறையாக கிலோ ₹130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக மக்களுக்கு பல முறை வேட்டு வைத்த பிரதமர் மோடிக்கு, மக்களவைத் தேர்தலில் நாம் வேட்டு வைக்க வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து டெல்டா மாவட்டங்களில் பிரசாரம் செய்து வரும் அவர், “தமிழகம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. அந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாக மாறிவிடுவார்” எனக் கூறினார்.
மும்பை அணி வீரர் ரோஹித் ஷர்மாவை வளைத்துப் போட சன் ரைஸர்ஸ் ஐதராபாத் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. MI கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்ட அவரை வாங்க, ஐபிஎல் அணி உரிமையாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில், ரோஹித்துக்கு கேப்டன் பதவியுடன் மிகப்பெரிய தொகையையும் ஊதியமாக வழங்க SRH அணி நிர்வாகம் தயாராக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு க்வாலியர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. 30 ஆண்டுகள் பழமையான வழக்கிற்கு தேர்தல் நேரத்தில் பிடி வாரண்ட் வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 1995ஆம் ஆண்டு லாலு முதல்வராக இருந்தபோது ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் தற்போது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா எனக் கேட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் பதிலடி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X-இல் பதிவிட்டுள்ள அவர், “திமுக வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி! அதிமுக, பாஜக பறித்த உரிமைகளை மீட்போம்” எனக் கூறியுள்ளார்.
இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும். சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 2 – 3 முறை இஞ்சி டீ குடித்து வந்தால் உடல் எடை குறையும். பச்சை காய்கறிகள் போன்ற கலோரி குறைந்த, சத்துக்கள் மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கொருக்குப்பேட்டையில் வெண்புறாவை பறக்கவிட்டு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த அவர், ‘படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை’ என்றார்.
Sorry, no posts matched your criteria.