India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென், உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். சமீபத்தில் நடந்த All England Open பேட்மிண்டன் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர், அரையிறுதி வரை முன்னேறினார். இதனால், BWF தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி தற்போது 13ஆவது இடத்தில் உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க உள்ளதால், BWF தரவரிசையில் டாப் 10க்குள் செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
திமுக தேர்தல் அறிக்கையை நாளை வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்க கனிமொழி எம்பி தலைமையில் அக்கட்சி குழு அமைத்தது. அக்குழு, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு தயாரித்த அறிக்கையை நாளை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளது. அதில், வாக்காளர்களை கவரும் வகையில், குறிப்பாக பெண்களை கவரும் வகையில் வாக்குறுதிகள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.
ஏழைப் பெண்களுக்காக மஹாலட்சுமி திட்டம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு மாதம் ₹8,333 கிடைக்கும். இத்திட்டம் மக்களின் மத்தியில் வரவேற்பை பெறும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
சிஏஏவுக்கு தடை கோரி தாக்கலான மனுக்கள் குறித்து 3 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், பதில் அளிக்க 4 வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது. இதைக்கேட்ட உச்சநீதிமன்றம், 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
85 வயதுக்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான படிவம், வருகிற 20ஆம் தேதி முதல் வீடு வீடாக வழங்கப்பட இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான 12டி படிவம் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளது” என்றார்.
உலகில் அதிக காற்று மாசுயுடைய தலைநகராக டெல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் IQAir அமைப்பு, 2023ஆம் ஆண்டின் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளதென்றும், உலகில் அதிக மாசுயுடைய பெருநகராக பீகாரின் பெகுசராயும், அதிக மாசுயுடைய தலைநகராக டெல்லியும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
நடைபெற உள்ள IPL தொடரில் கம்பீர் KKR அணியின் வழிகாட்டியாக செயல்படவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் அணியில் அவர் இணைந்த நிலையில், ஷாருக் தன்னிடம் பேசியது குறித்து பகிர்ந்துள்ளார். “2011இல் நான் அணியில் சேர்ந்தபோது என்னிடம் என்ன கூறினாரோ, அதையேதான் இப்போதும் கூறினார். இது உங்கள் அணி, நல்ல அணியை உருவாக்கு அல்லது அழித்துவிடு என்றார். அதற்கு இங்கிருந்து செல்லும் முன் நல்ல அணியை கட்டமைப்பேன்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவர் என அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது அவர்களின் விருப்பம் என்று கூறிய அவர், மூழ்குகிற கப்பலில் அவர்கள் ஏறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், நிவாரணத்தை பிச்சை எனக் கூறி தமிழக மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர், திமுக வழக்கறிஞர்கள், சமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
பாஜக கூட்டணியில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சி இணையலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை ராஜ் தாக்கரே இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜக கூட்டணியில் அக்கட்சி சேர்ந்து, தெற்கு மும்பை உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.