India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
I.N.D.I.A கூட்டணியில் உள்ள சிபிஐ கேரளாவில் ராகுல் காந்திக்கு எதிராக ஆனி ராஜாவை களமிறக்கியுள்ளது. இந்நிலையில், காங்., நிலை குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேலி செய்துள்ளார். ஒரு பக்கம், ராகுலை உ.பி-க்குச் சென்று போட்டியிடுமாறு இடதுசாரிகள் வலியுறுத்துவதாகவும், மறுபுறம் அதே இடதுசாரிகள் I.N.D.I.A கூட்டணிக் கூட்டத்தின் போது ராகுலை கட்டியணைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ரூ.53,000-ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே இருப்பதால் மாநில முழுவதும் தேர்தல் பரப்புரை விறுவிறுப்பு அடைந்துள்ளது. தென்காசி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதாரித்து டிடிவி பரப்புரை மேற்கொண்டார். திமுக மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளி வாசலில் தொழுகைக்கான சத்தம் கேட்டது. இதை கவனித்த உடன் டிடிவி கையில் இருந்த மைக்கை ஆப் செய்துவிட்டு பேசுவதை நிறுத்தினார்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா அதிபர் முதலிடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 3 மாதங்களில் அவரின் சொத்து மதிப்பு 48.4 பில்லியன் டாலர் குறைந்து, 180.6 பில்லியன் டாலரானதால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் அதிபர் ஜூகர்பெர்கின் சொத்து மதிப்பு 58 பில்லியன் டாலர் அதிகரித்து, 186 பில்லியன் டாலரானதால், 3வது இடத்துக்கு முன்னேறினார்.
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுடன் இருந்த போது புகழேந்தி திடீரென்று மயங்கி விழுந்தார். உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக உண்மையை மறைத்து நாடகமாடுவதாக நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், கச்சத்தீவை காங்கிரஸ், திமுகவினர் சேர்ந்துதான் இலங்கைக்கு கொடுத்துள்ளனர் என்றும், தற்போது தேர்தலுக்காக உண்மையை மறைத்து, நாடகமாடுவதாகவும் சாடினார். மேலும், நாட்டில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் என்றும் அவர் கூறினார்.
மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.9 முதல் 16ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அவர், பரப்புரை மேற்கொள்கிறார். தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் அவருக்கு தனிச் செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய மாணவர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் கிளீவ்லாந்தில் படித்து வந்த உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி எம்.பியும், பாஜக வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ₹4.10 கோடி எனத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் அவர் அறிவித்த சொத்து மதிப்பு ₹13.46 லட்சமாக இருந்த நிலையில், 5 ஆண்டுகளில் அவை 31.5 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், பெங்களூருவில் அவர் மீது 2 வழக்குகளும், டெல்லியில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தவோ, ஆக்கிரமிக்கவோ செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அண்டை நாடுகள் தொடர்பாக இந்தியா ஆரம்பம் முதல் ஒரே கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார். அதேநேரத்தில் இந்தியா தனக்கு எதிரான செயல்களை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.