India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 100ஆவது நாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் கண்ணீர் மல்க அழுது, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய பொதுமக்களுக்கு அக்கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்றால் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்த பணிகளை அதிகாரிகள் தற்போதே தொடங்கியுள்ளனர். 2030க்குள் முதியோர் ஓய்வூதியத்தை 50% அதிகரிக்கவும், வேலைகளில் 50% பெண்கள் இருப்பதை உறுதி செய்யவும், மின் வாகன விற்பனையை 30% ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களை விரிவுபடுத்துதல், தனியார் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை 2030க்குள் ஒரு கோடியாக குறைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அமைச்சகங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், நீதித்துறையை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதனால், மீண்டும் வெற்றி பெற்றால், மோடி அரசு பல முக்கிய முடிவுகளை எடுக்கும் எனத் தெரிகிறது.
தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதா என்று கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உச்சநீதிமன்ற முடிவால் தேர்தல் பத்திர நிதி சட்டவிரோதம் என தெளிவாகி விட்டதாகவும், இதற்காக பாஜகவுக்கு I.T. நோட்டீஸ் அனுப்பியதா, E.D. சோதனை நடத்தியதா, காங்கிரஸ் வங்கி கணக்கை முடக்கியதை போல ரூ.6,655 கோடி பெற்ற பாஜக வங்கி கணக்கு முடக்கப்பட்டதா எனவும் கேள்வியெழுப்பினார்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் கொளுத்தி எடுக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுவும், சமவெளிப் பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும். ஏப்.9, 10இல் வெப்ப அலை வீசும். எனவே, அதிக வெப்பத்தால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால், குழந்தைகள், முதியோர் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம். இளநீர், மோர் போன்றவற்றை அடிக்கடி அருந்தவும்.
ஆட்சிக்கு வர மாட்டோம் என காங்கிரசுக்கே தெரியும் என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிரகலாத் ஜோஷி கிண்டலடித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். அப்போது, ஆட்சிக்கு வர மாட்டோம் என்பதால் வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டியதில்லை என்று காங்கிரசுக்கே தெரியும், அதனால் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என்றார்.
மகளிருக்கு ₹1000 உரிமைத் தொகையை கொடுத்துவிட்டு, அதை சொல்லியே வாக்கு கேட்பது எப்படி சேவையாகும்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மக்கள் மீது வரிச்சுமையை திணித்து, வாழ்வது கடினம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டதாக வேதனை தெரிவித்தார். மறுபடியும் 100 நாள் வேலை திட்டத்தை பிடித்து தொங்குவதாகவும், இதனால் நாடு நாசமானதே தவிர வேறொன்றும் ஆகவில்லை எனவும் சாடினார்.
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவர் மறைந்ததால், தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாகி விட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்பு அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை. தேர்தல் முடிவு வெளியான பிறகு இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
காங்., வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதி இயற்கைக்கு முரணானது என்று EX மினிஸ்டர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் நிதி கொடுக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கோடி தேவைப்படும். இந்தியாவின் வருவாய் மற்றும் கடனை கணக்கீடு செய்யாமல், மக்களை ஏமாற்றும் வகையில் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதாக விமர்சித்தார்.
கமிஷனுக்காக அமைக்கப்பட்டது I.N.D.I.A. கூட்டணி என்று மோடி விமர்சித்துள்ளார். உ.பி.யில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், I.N.D.I.A. கூட்டணி கமிஷனுக்காக அமைக்கப்பட்டது, ஆனால் பாஜக கூட்டணி மற்றும் தனது அரசு திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டது என்றார். அரசியலை பாஜக பின்பற்றவில்லை, தேசியவாத கொள்கையை பின்பற்றுகிறது என்றும், இதனால் மக்களின் நம்பிக்கை, இதயங்களை வென்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.