News March 20, 2024

விருப்ப மனு அளித்தார் விஜயபிரபாகரன்

image

மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயபிரபாகரன் விருப்ப மனு அளித்துள்ளார். திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. பாஜக சார்பில் அங்கு ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் விஐபி-க்ககள் மோதும் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.

News March 20, 2024

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை

image

மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தலையொட்டி, தமிழக காவல்துறை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 28ஏ-வின்கீழ், டிஜிபி, காவல் ஆணையர்கள் உள்பட அனைத்து காவல்துறையினரும் தேர்தல் முடிவு வெளியாகும் வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 20, 2024

திருமணத்தை 6 ஆண்டுகள் மறைத்த நடிகை

image

இந்தி நடிகை ஜூஹி சாவ்லா, தனது திருமணத்தை 6 ஆண்டுகளுக்கு வெளியே தெரியாமல் மறைத்துள்ளார். 1980கள் முதல் 2000 வரை உச்சத்தில் இருந்த அவர், 1995ல் ரூ.4,130 கோடிக்கு அதிபதியான ஜெய் மேத்தாவை திருமணம் செய்தார். இது திரையுலகுக்கு தெரிந்தால், நடிப்பு தொழில் பாதிக்குமென கருதி, முதல் கர்ப்பம் தரித்தபிறகு, 2001ல் ஒரு பேட்டியிலேயே தெரியப்படுத்தினார். அந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

News March 20, 2024

பாஜகவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

image

கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில் பாஜகவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. கோவை பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களை அனுப்பிய ஸ்ரீ சாய்பாபா பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 20, 2024

I.N.D.I.A. கூட்டணிக்கு பொது தேர்தல் அறிக்கை கிடையாதா?

image

I.N.D.I.A. கூட்டணிக்கு பொது தேர்தல் அறிக்கை கிடையாதா என மக்களிடையே கேள்வியெழுந்துள்ளது. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள், I.N.D.I.A. கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் விரைவில் வெளியிடவுள்ளது. இதேபோல் பிற கட்சிகளும் வெளியிடலாம் என கூறப்படுவதால், பொதுவான தேர்தல் அறிக்கை கிடையாதா என்ற கேள்வியெழுந்துள்ளது.

News March 20, 2024

ஃபாஸ்டிங் இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம்

image

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கையில், “16 மணிநேரம் வரை உண்ணாவிரதம் இருந்து விட்டு 8 மணிநேரத்துக்கு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இம்முறையை பின்பற்றுவோருக்கு 91% இதயநோய்கள் உண்டாகும். அத்துடன் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

News March 20, 2024

பாமக – பாஜக கூட்டணி… மனந்திறந்து பேசிய இபிஎஸ்

image

பாமக, பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முதல் முறையாக மனந்திறந்து பேசியுள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர், “அதிமுக எப்போதும் சொந்தக் காலில் நிற்கும் கட்சி. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வருவதும் வராமலிருப்பது அவரவர் விருப்பம். அது அவர்களின் முடிவு. பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது ஏமாற்றத்தை அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

News March 20, 2024

அதிமுகவில் இருந்து விலகி வந்தவர்களுக்கு சீட்டு

image

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அதிமுக மூத்த தலைவர்களான செல்வகணபதி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனும், 1991-96 காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதியும் தேனி & சேலம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இருவருக்கும் அவரவர் தொகுதியில் தனி செல்வாக்குள்ளது.

News March 20, 2024

தங்கம் விலை மேலும் உயர்ந்தது

image

கடந்த வாரங்களில் தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது விலை மளமளவென உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், இன்று ₹40 உயர்ந்து ₹49,120க்கும், கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹6,140க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹80.00க்கும் கிலோ ₹80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News March 20, 2024

தமிழுக்கு மீண்டும் அதிக முக்கியத்துவம்

image

திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ் மொழிக்கு மீண்டும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. எனினும் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்கப்படவில்லை. இதை மனதில் வைத்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில், “ஒன்றிய ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்றாக்கப்படும். ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழிலும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!