News March 21, 2024

தஞ்சை தொகுதியால் பாஜக கூட்டணியில் இழுபறி

image

பாஜகவிடம் தஞ்சாவூர் தொகுதியை கேட்டு ஓபிஎஸ் & ஜி.கே.வாசன் அழுத்தம் தருவதால் கூட்டணியை இறுதி செய்ய பாஜக திணறி வருகிறது. ஓபிஎஸ் அணியில், வைத்திலிங்கம் தனது மகனுக்காக அந்த தொகுதியை பெற அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே போல் தனது சமூக வாக்குகள் அதிகம் உள்ள அத்தொகுதியை ஜி.கே.வாசனும் கேட்பதால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் பாஜக தலைமை குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

News March 21, 2024

தினம் ஒரு தொகுதி: இன்று ஸ்ரீபெரும்புதூர்

image

பெரும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டின் பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்று ஸ்ரீபெரும்புதூர். மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 திமுக வசமுள்ளன. இதுவரை இங்கு நடந்த 14 தேர்தல்களில் திமுக 8, காங். & அதிமுக தலா 3 முறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் T.R.பாலு 5,07,955 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

News March 21, 2024

கட்சி விளம்பரங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

image

அரசியல் கட்சிகளின் அங்கீகாரமற்ற விளம்பரங்களை அகற்ற மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகாரை அடுத்து, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் புதிய மனு

image

டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய 9 சம்மன்களை எதிர்த்து, ஏற்கனவே அவர் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாதென உத்தரவிடக்கோரி அவர் தாக்கல் செய்த புதிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

News March 21, 2024

நுங்கு இளநீர் சர்பத் செய்வது எப்படி?

image

வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது நுங்கு. கோடையில் அதிகமாக கிடைக்கும் நுங்கை கொண்டு ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். இளநீர் வழுக்கைத் துண்டுகள், நுங்கு (தோல் உரித்தது), பனை வெல்லம் ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதில் இளநீரை ஊற்றி, சில நுங்கு துண்டுகளை சேர்த்தால் சுவையான நுங்கு இளநீர் சர்பத் ரெடி.

News March 21, 2024

தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்வு

image

கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டு சவரன் ரூ.50,000-ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹760 உயர்ந்து ₹49,880க்கும், கிராமுக்கு ₹95 உயர்ந்து ₹6,235க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,500 உயர்ந்து ஒரு கிராம் ₹81.50க்கும் கிலோ ₹81,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News March 21, 2024

மக்களவைத் தேர்தலில் சாதிப்பாரா இபிஎஸ்?

image

இபிஎஸ் தலைமையில் அதிமுக மக்களவைத் தேர்தலை 2வது முறையாக சந்திக்கிறது. கடந்த தேர்தலில் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் ஒரே அணியில் இருந்தனர். அதே போல் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இருப்பினும், ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் இத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் பாஜக இல்லாமல் அதிமுக போட்டியிடுகிறது. இதில் இபிஎஸ் சாதிப்பாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

News March 21, 2024

ஆளுநருக்கு எதிரான மனு இன்று விசாரணை

image

ஆளுநர் ரவி பொன்முடியை அமைச்சராக நியமிக்காததற்கு எதிரான தமிழக அரசின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற மனு மீதும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

News March 21, 2024

ஆப்கனை வெல்லுமா இந்தியா?

image

உலக கோப்பை (ஆசிய பிரிவு) கால்பந்து 2ஆவது கட்ட தகுதிச் சுற்றில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சவுதி பிரின்ஸ் சுல்தான் மைதானத்தில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் இந்திய அணி (117), ஆப்கனை (158) வென்றால், உலக கோப்பை கால்பந்து மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றுக்கு, முதல் முறையாக முன்னேறும். ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஆப்கனை வென்றது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2024

புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தம்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

error: Content is protected !!