India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவிற்கு யாரும் போட்டியே இல்லை என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். செந்தில் பாலாஜி எங்கள் வழியாக கோவையில் பணியாற்றி வருகிறார். அவரின் பணியை நாங்கள் செய்து வருகிறோம். நிச்சயம் இதில் வெற்றி அடைவோம். வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் கோவையில் திமுக வெல்லும்” என்றார்.
2024 ஐபிஎல்லுக்கு பிறகு தோனி ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் 2020ல் ஓய்வு பெற்ற போதும், ஐபிஎல்லில் தோனி விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கி 5 முறை கோப்பையும் வென்று தந்துள்ளார். 2024 ஐபிஎல்லுக்கு பிறகு அவர் ஓய்வு பெற இருப்பதாகவும், இதனால் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதை தனது கொள்கையாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்துள்ளதாக அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஆளுநர் தான் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய மறுக்கிறார். பதவிப்பிரமாணம் செய்வதை தவிர்க்கிறார். ஆளுநர் உரையை வாசிக்க மறுக்கிறார். மசோதாக்களை தொடர்ந்து கிடப்பில் போட்டு வைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்ல வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். ஐபிஎல் துவங்கியது முதல் இதுவரை ஆர்சிபி அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், “இந்த ஆண்டு மகளிர் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. அது போல, ஆடவர் போட்டியிலும் ஆர்சிபி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது” எனக் கூறியுள்ளார்
விழுப்புரம் தொகுதியில் பாமக மற்றும் விசிக நேரடியாக தேர்தல் களத்தில் மோதவுள்ளன. தனித் தொகுதியான அங்கு விசிக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும், பாமக மாணவரணிச் செயலாளர் முரளி சங்கரும் நேரடியாக மோதுகின்றன. இதுவரை நடந்த 3 தேர்தல்களில் விசிக ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. விசிக, பாமக சம பலத்தில் உள்ளதால் இந்த தொகுதி மீதான கவனம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைக்க மஹிந்திரா நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பாக அதானி டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் மின் வாகன பிரிவான இமொபிலிட்டி வெளியிட்ட குறிப்பில், “கார்பன் உமிழ்வுகளை குறைக்கவும், இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடையவும் சார்ஜிங் உள்கட்டமைப்பு உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட மறுப்பதாக வெளியான தகவலை இயக்குநர் தங்கர் பச்சான் மறுத்துள்ளார். மேலும், இவ்வாறு பொய் செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, பாமக கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக இன்று காலை அவர் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26 – ஆக. 11 வரை 33ஆவது ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.
இதன் தொடக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவம், ஆண் வீரர்கள் சார்பில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த வீராங்கனை இந்தியக் கொடியை ஏந்துவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய வீரர்கள் குழுவின் தலைவராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி முருகனுக்கு தேரோட்டம் நடைபெற உள்ளதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அஞ்செட்டி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாக்களிலும் மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.