News April 7, 2024

சீரியல் பார்ப்பதை பெண்கள் நிறுத்த வேண்டும்

image

சீரியல் பார்ப்பதை பெண்கள் நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாமியார், மருமகள் சண்டை தொடர்பான சீரியல்கள் நிஜ வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. தேர்தல்கள், அரசியல் உண்மைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பெண்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அவர், நேரத்தை விரயம் செய்யும் இது மாதிரியான விஷயங்களை செய்யக் கூடாது எனக் கூறினார்.

News April 7, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 07) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News April 7, 2024

க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு கொடுங்கள்

image

உட‌ல் மு‌க்‌கியமான உறுப்பு க‌ண். கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தொட‌ர்‌ந்து பா‌ர்‌ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகிறது. இதனால், க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஓய்வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதுவே நாம் கண்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

News April 7, 2024

எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக வேட்டையாடுகிறது

image

ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.8,252 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. மோடியும், அவரது கட்சியும் மீண்டும் ஓர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது என்று கூறிய அவர், எதிர்க்கட்சி தலைவர்கள் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐயால் வேட்டையாடப்படுவதாக குற்றம் சாட்டினார்.

News April 7, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 07) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News April 7, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
➤ டி.டி.வி. தினகரன் களத்திலேயே இல்லை – தங்க தமிழ்ச்செல்வன்
➤ பாஜக எங்களை யாரும் மிரட்டவில்லை – பிரேமலதா
➤ பாஜகவில் இணைந்து விடுமாறு அழைப்பு விடுத்தார் – கருணாஸ்
➤‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியீடு
➤ நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி

News April 7, 2024

அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்தது இதுக்குதான்

image

ரவுடிகளுக்கு பொறுப்பு கொடுக்கவே அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்துள்ளதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘பாஜக அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக படுத்தால் தூக்கம் வரவில்லை. அதனால் தான் திமுகவை ஆதரித்து தேர்தலில் பரப்புரை செய்து வருகிறேன். பணம், பதவி உள்ளிட்டவற்றை தருவதாகக் கூறி பாஜகவில் சேர, அழைத்த போதும் தான் செல்லவில்லை’ என்றார்.

News April 7, 2024

இதில் அமெரிக்காவை முந்திய இந்திய நிறுவனங்கள்

image

2023ஆம் ஆண்டில் 500 முன்னணி நிறுவனங்கள் வருமான வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. அதாவது, 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அமெரிக்க பங்குச்சந்தையின் எஸ் & பி-யில் உள்ள 500 நிறுவனங்களின் வருமானம் 14.1% உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இந்தியாவின் பிஎஸ்இ 500 நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருமானம் 17.4% உயர்ந்துள்ளது. தொடர்ந்து 2ஆவது ஆண்டாக வளர்ச்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2024

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

image

சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த வேண்டுமென அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரிய தாக்குதலை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 7, 2024

என்.ஐ.ஏ அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு ஆளுநர் கண்டனம்

image

மே.வங்கத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் தீவிரமான பிரச்சனை என அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியை சிலர் உடைத்து தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்துள்ள ஆளுநர், ‘சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்றார்.

error: Content is protected !!