India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏ.டி.’ அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவு ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருப்பதால், வெளியீட்டைத் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கெனவே பிரபாஸின் ‘சலார்’ படமும் கிட்டத்தட்ட 4 மாதங்கள் தாமதமாகவே வெளியானது. இப்போது அவரது புதிய படமும் வெளியாக கால தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.
I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்க உள்ள கதாநாயகன் என்று கூறினார். மக்கள் முன்னேற்றத்திற்காக திமுக, காங்கிரஸ் பாடுபடுவதாக கூறிய அவர், மதத்தின் பெயரால் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாக சாடினார்.
திரிணாமுல் காங்கிரஸின் ஊழலால் மேற்குவங்க மக்கள் சலிப்படைந்து இருப்பதாக மோடி விமர்சித்துள்ளார். அவரின் எக்ஸ் பக்க பதிவில், ” ஜபைல்குரியில் இன்று பிரசாரம் செய்ய போகிறேன். அங்கு பாஜகவுக்கு பெரும் ஆதரவு காணப்படுகிறது. திரிணாமுலின் ஊழல், மோசமான ஆட்சி நிர்வாகத்தை கண்டு மேற்குவங்க மக்கள் சலிப்பில் உள்ளனர். அவர்களின் கனவுகளை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும்” எனக் கூறியுள்ளார்.
திருச்சியில் நடிகை மஞ்சு வாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். மலையாளத்தில் ஏராளமான படங்களிலும், தமிழில் தனுசுடன் அசுரன், அஜித்துடன் துணிவு படங்களிலும் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். திருச்சியில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். கார் முழுவதையும் சோதனை செய்த பிறகே அவர் செல்ல அனுமதித்தனர்.
மக்களவைத் தேர்தல் 2 குடும்பங்களுக்கு இடையேயான போர் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். ரெங்காரெட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நடைபெறவுள்ள தேர்தல், மோடி குடும்பத்திற்கும், காங்கிரஸ் குடும்பத்திற்கும் இடையேயான போர் என்றார். மோடியின் குடும்பத்தில் ED, CBI, IT, EVM உள்ளதாகவும், இந்த போரில் தேவைப்பட்டால் தியாகம் செய்ய தயாராக வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
2024 மக்களவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அரச குடும்பங்களைச் சேர்ந்தோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளன. பாஜக தரப்பில் 10 பேர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மைசூர் அரச குடும்பத்தை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ வாடியார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மகன் துஷ்யந்த் சிங், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முக்கியமானவர்கள்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வேட்பாளராக சத்ரபதி சிவாஜி வம்சமான கோலாப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த சாஹூ மகாராஜ் சத்ரபதி போட்டியிடுகிறார். கோலாப்பூர் தொகுதியில் 1999ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக காங்கிரஸ் தற்போதுதான் போட்டியிடுகிறது. இதில் வெற்றி பெறும் நோக்கில், அங்கு செல்வாக்கு அதிகமுள்ள கோலாப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த சாஹூ மகாராஜ் சத்ரபதியை காங்கிரஸ் வேட்பாளராக்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சாரங்கர் அரச குடும்பத்தை சேர்ந்த மேனகா தேவி சிங் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர், ஒருங்கிணைந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான நரேஷ் சந்திர சிங்கின் மனைவி ஆவார். அத்தொகுதியில் சாரங்கர் அரச குடும்பத்துக்கு இருக்கும் செல்வாக்கை மனதில் கொண்டு, மேனகா தேவி சிங்கை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பணத்தை எடுத்துச் சென்ற பாஜக பிரமுகர் சதீஷ் உட்பட மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அப்பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பாலிவுட் ஹீரோ அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மைதான்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்திய கால்பந்து விளையாட்டின் தந்தை என்று போற்றப்படும் செய்யத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் பயோ பிக் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நடிகை பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.