India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பால் தாக்கரே கொள்கைகளை கைவிட்டதால் உத்தவ்வை எதிர்த்ததாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் உத்தவ் ஆட்சியமைத்து இருந்தபோது, அவரை எதிர்த்து 2022இல் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஷிண்டே விலகினார். பின்னர் பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வரானார். இந்நிலையில், தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், வீட்டு வேலையாள் போல தங்களை உத்தவ் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கார்கள் விற்பனை புதிய உச்சம் கண்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் 36,40,399 கார்கள் விற்பனையாகி இருந்தன. அதை விஞ்சும் வகையில், 2023-2024 நிதியாண்டில் 39,48,143 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 8.45% அதிகமென்றும், இந்தியாவில் கார்கள் இந்தளவு அதிகமாக விற்பனையாகியிருப்பது இதுவே முதல்முறை என்றும் ஆட்டோ மொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி, குற்றவியல் சட்டம் (Cr.P.C) 110 பிரிவின் கீழ், கோவையில் 350 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய மனித உரிமை வழக்குரைஞர் ரகுநாத், “இந்த வழக்குகள் பெரும்பாலும் சமூக செயற்பாட்டாளர்கள், தலித் & இஸ்லாமிய இளைஞர்கள் மீது பதியப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் போராடுவோரை ஒடுக்க இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இடைக்கால ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை கடந்த மாதம் ED கைது செய்தது. இந்நிலையில், தனது மகனுக்கு தேர்வுகள் வருவதால் அவருடன் இருக்க வசதியாக ஜாமீன்கோரி கவிதா மனு தாக்கல் செய்திருந்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 4ஆவது சுற்றுப் போட்டியில், பிரக்ஞானந்தா டிரா செய்துள்ளார். அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுக்கு எதிரான இப்போட்டியானது, 24 நகர்த்தல்களிலேயே டிரா ஆனது. இதனைத் தொடர்ந்து, ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ், மகளிர் பிரிவில் வைஷாலி ஆகியோரது ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இதனால் புள்ளிப் பட்டியலில் குகேஷ் 2ஆவது மற்றும் பிரக்ஞானந்தா 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் மீது அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கடும் அதிருப்தியில் உள்ளது அனைவருக்கும் அறிந்ததே. மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது, பொறுப்பு வழங்காமல் ஒதுக்கியது போன்றவையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் பரப்புரையில் அவரை ஈடுபடுத்த எண்ணி முக்கியஸ்தர் ஒருவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்கும் அவர் பிடிகொடுக்கவில்லையாம்.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ரயிலில் ₹4 கோடி பணம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு. ஓட்டுக்கு பணம் கொடுத்தால், வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளுங்கள். ஆனால், பணம் பெற்றதால் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்தார்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. இதனால் புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு சரிந்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில், சென்னை வெற்றி பெறுமா? மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மாட்டிறைச்சி சாப்பிடுவதாக வதந்தி பரப்பப்படுவதாக மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி சாப்பிடுவதில் தவறில்லை என 2019இல் அவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதை மறுத்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மாட்டிறைச்சியோ, வேறு இறைச்சியோ தாம் சாப்பிடுவதில்லை, தாம் ஒரு பெருமைமிகு இந்து என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.