News March 24, 2024

2வது குழந்தை பிறக்காததை நினைத்து நடிகை வேதனை

image

2ஆவது குழந்தை பிறக்காததை நினைத்து இந்தி நடிகை ராணி முகர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 8 வயதில் ஆதிரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி முகர்ஜி அளித்த பேட்டியில், ” தற்போது எனக்கு 46 வயதாகிறது. ஆதலால் இனிமேல் எனக்கு 2வது குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. எனது மகளுடன் விளையாட ஒரு துணையை பெற்றுத் தர முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது. இது வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தும்” என்றார்.

News March 24, 2024

திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் டிடிவி

image

தேனி தொகுதியில் டிடிவி களமிறங்குவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தொகுதியில் 1999இல் ஏற்கெனவே டிடிவி எம்பியாக இருந்தவர். மக்கள் மத்தியிலும் தனிச் செல்வாக்கு மிக்கவரான இவருக்கு, சமூக சார்ந்த ஓட்டும் எளிதாக கிடைக்கும். ஓபிஎஸ்ஸின் செல்வாக்கும் கூடுதல் பலமாக இருக்கிறது. இதனால், இவருக்கும் தங்கதமிழ்செல்வனுக்கும் போட்டி நிலவுகிறது. அதிமுக 3வது இடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 24, 2024

நாதக வேட்பாளர்கள் பட்டியல் (1)

image

மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டனர். 1) திருவள்ளூர்- மு.ஜெகதீஷ் சந்தர் 2) வ.சென்னை- DR அமுதினி 3) தெ.சென்னை- முனைவர் சு.தமிழ்ச்செல்வி 4) ம.சென்னை – முனைவர் கார்த்திகேயன் 5) திருப்பெரும்புதூர் – DR வெ.ரவிச்சந்திரன் 6) காஞ்சிபுரம்- வி.சந்தோஷ்குமார் 7) அரக்கோணம்- அப்சியா நஸ்ரின் 8) வேலூர்- தி.மகேஷ் ஆனந்த் 9) தருமபுரி- DR .அபிநயா 10) தி.மலை – DR ரமேஷ்பாபு

News March 24, 2024

ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா? இனி ஈஸி

image

ரேஷன் கார்டுகள் தொலைந்துவிட்டால், ஆன்லைனில் பெறும் வசதியை உணவுத்துறை ஏற்படுத்தியுள்ளது. www.tnpds.gov.in-ல் “பயனாளர் நுழைவு” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, செல்போன் நம்பரை பதிவிட வேண்டும். பின் உங்கள் நம்பருக்கு வரும் ஓடிபி-யை பதிவு செய்து, ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து, Save என்ற ஆப்ஷனை தந்தால் போதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும்.

News March 24, 2024

மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர்

image

மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே நாட்டின் அடுத்த பிரதமர் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பாஜகவும், அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. சிறுபான்மை வாக்குகளை பெறவே கூட்டணி இல்லை என அதிமுக பொய் கூறுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். மு.க. ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் ஆவார்” என்றார்.

News March 24, 2024

வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்!

image

SRH அணி உரிமையாளர் காவ்யா மாறனின் ரியாக்‌ஷன்களை கிரிக்கெட் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். SRH & KKR அணிகள் நேற்று மோதின. இதில், கிளாசெனின் அதிரடி ஆட்டத்தால் SRH வெற்றியை நோக்கி சென்றபோது, காவ்யா துள்ளி குதித்து கொண்டாடினார். அடுத்த சில நிமிடங்களில் SRH அணியின் நிலைமை தலைகீழாகி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றபோது சோகத்தில் ஆழ்ந்தார்.

News March 24, 2024

5 எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

image

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியானது. இதில், எம்.பிக்களாக உள்ள ஜோதிமணி (கரூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), விஜய் வசந்த் (குமரி) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த தேர்தலில் ஆரணியில் வென்ற விஷ்ணு பிரசாத்துக்கு இம்முறை கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

“நாளை முதல் விடுமுறை”

image

நடப்பாண்டு +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளன. நாளை மதியம் தேர்வு முடிந்த உடன் +1 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளி எப்போது திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வுமுடிவுகள் மே 14-ல் வெளியிடப்படும்.

News March 24, 2024

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

image

ஜெயலலிதாவை உதயநிதி புகழ்ந்து பேசியுள்ளார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக திமுகவும், அதிமுகவும் செயல்படுகின்றன. இந்நிலையில், மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய செய்தபோது உதயநிதி, “நீட் தேர்வை ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. இதனால் அவர் இருந்தவரை தமிழகத்தில் நீட் நடக்கவில்லை. பிறகு வந்த அடிமைக் கூட்டமே (இபிஎஸ் அரசு) அனுமதியளித்தது. இதனால் தமிழகத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்து விட்டனர்” என்றார்.

News March 24, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*அதிமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் திட்டம் – திருமாவளவன்
* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி நியமனம்
* ஐ.டி.எப்., டென்னிஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்
இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன்.
*பெலினோ, வேகன் ஆர் கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து ரீகால் செய்யும் மாருதி சுசூகி *மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது.

error: Content is protected !!