News April 7, 2024

முதலில் பேட்டிங் செய்கிறது லக்னோ

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்திருக்கிறது. லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் கில் தலைமையிலான குஜராத் அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே தலா 2 போட்டிகளை வென்றுள்ளதால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

News April 7, 2024

தமிழகத்தில் இடைத் தேர்தல் வருகிறது

image

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அத்தொகுதி காலியானது என சட்டப்பேரவை செயலகம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில், நடப்பு தேர்தலில் 7 கட்டங்கள் முடிவதற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

News April 7, 2024

மும்பை அணி வெற்றி

image

ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், நடப்பு தொடரில் மும்பை தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 234 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, கடைசி பந்து வரை போராடி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி தனது கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தது வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது.

News April 7, 2024

அண்ணாமலை இதற்கு பதில் சொல்லியே ஆகணும்

image

தேர்தலில் ஓட்டுக்கு காசு தரமாட்டோமென்று சொன்ன அண்ணாமலை, பாஜக நிர்வாகியிடம் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து உரிய பதில் சொல்ல வேண்டுமென நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். நேற்றிரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் என்பதால், அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News April 7, 2024

இந்த அறிகுறிகள் இருந்தால் சிறுநீரக பாதிப்பு உறுதி

image

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், கீழ்காணும் அறிகுறிகள் உடலில் தென்படும். அதை தெரிந்து கொள்வோம். 1) மிகுந்த உடல் சோர்வு 2) தூக்கமின்மை 3) பாதங்களில் வீக்கம் 4) கண்களை சுற்றி வீக்கம் 5) தசை வலி ஆகியவை இருக்கும். இந்த அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர பிரச்னைகளை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தாகி விடும்.

News April 7, 2024

ஈரோட்டில் வெப்பம் 42 டிகிரி செல்சியஸை தொட்டது

image

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் வெப்பநிலை 42 டிகிரியை தொட்டது. மொத்தம் 10 நகரங்களில் வெப்பம் 40 டிகிரிக்கு மேல் பதிவானது. தர்மபுரி 40.7 டிகிரி, கரூர் பரமத்தி 40 டிகிரி, நாமக்கல் 41 டிகிரி, சேலம் 41.6 டிகிரி, தஞ்சாவூர் 40 டிகிரி, திருப்பத்தூர் 41.6 டிகிரி, திருச்சி 40.7 டிகிரி, திருத்தணி 40.4 டிகிரி, வேலூர் 41.3 டிகிரி என வெப்பம் பதிவானது. சென்னையில் அதிகபட்ச வெப்பம் 39 டிகிரி என பதிவானது.

News April 7, 2024

முடிவுக்கு வந்தது பிரபல விஜய் டிவி சீரியல்

image

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ‘தமிழும் சரஸ்வதியும்’ மெகா சீரியல் இந்த மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. 700க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்திருக்கும் இந்த சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தீபக் தினகர், நக்‌ஷத்ரா நாகேஷ் நடித்த இந்த சீரியலை ச.குமரன் இயக்கி வந்தார். 2021ஆம் ஆண்டு இந்த சீரியலின் முதல் எபிசோடு ஒளிபரப்பானது.

News April 7, 2024

அரை சதம் கடந்த ப்ரித்வி ஷா

image

மும்பைக்கு எதிராக இமாலய இலக்கை துரத்தும் டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா, 40 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 234 ரன்கள் குவித்தது. பின்னர், களமிறங்கிய டெல்லி அணிக்கு அழுத்தம் அதிகமிருந்தாலும் நிதானமான ஆட்டத்தை ப்ரித்வி ஷா வெளிப்படுத்தினார். பின்னர், பும்ரா வீசிய யார்க்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

News April 7, 2024

அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்

image

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கே.பாலகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க ரூ.4.5 கோடியை நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் எடுத்துச் சென்றதை சுட்டிக்காட்டி, அவர் இந்த மனுவை வழங்கியுள்ளார்.

News April 7, 2024

டக் அவுட் ஆனார் சூர்யா

image

காயத்தில் இருந்து மீண்டு வந்த மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியிலேயே டக் அவுட் (0) ஆனார். ஒரு பக்கம் அதிரடியாக ஆடினாலும், மறுபக்கம் அவ்வப்போது டக் அவுட் ஆகுபவர் சூர்யா. பல மாதங்கள் ஓய்வில் இருந்துவிட்டு இன்று அணிக்கு திரும்பிய அவர், அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

error: Content is protected !!