India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையில் சிக்கியுள்ள விஸ்தாரா விமான நிறுவனம், தினசரி 25 – 30 விமானங்களின் சேவையை நிறுத்த முடிவெடுத்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தை ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தங்களின் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை என தெரிவித்து பணியாளர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளனர்.
1957ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 16 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. 1957இல் 45 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2019இல் 726 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1957ஆம் ஆண்டு தேர்தலில் 1,474 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2019ஆம் ஆண்டு தேர்தலில் 7,322 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வானியல் அதிசயங்களுள் ஒன்றான சூரிய கிரகணம் நாளைய தினம் (ஏப்., 8) நடைபெறவுள்ளது. இந்த கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும், அதன் தாக்கம் அனைத்து ராசியினர் மீதும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசியினர் இந்த கிரகணத்தை தொடர்ந்து 3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். சுகாதார ரீதியான தொல்லைகளை இவர்கள் அனுபவிக்க நேரிடலாம்.
நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் மார்ச் 22ஆம் தேதி வெளியான படம் ‘ரெபெல்’. கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்திற்கு திரையரங்குகளில் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் ரெபெல் படம் வெளியாகியுள்ளது. திரையரங்கில் படம் வெளியான இரண்டே வாரத்தில் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகிறார். நாளை (ஏப்.8) நாமக்கல், நாகை தொகுதி வேட்பாளர்களுக்கும், நாளை மறுநாள் (ஏப்.9) தென்காசியில் ஜான் பாண்டியனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். நாளை காலை டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வரும் ராஜ்நாத் சிங் அங்கிருந்து நாமக்கல் சென்று வாகனப் பேரணியில் பங்கேற்க உள்ளார்.
பிரிட்டன் நாட்டில் மனைவியை கொலை செய்து 200 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 28 வயது இளைஞரான நிக்கோலஸ் மெட்சன், மனைவி ஹோலி பிராம்லியை குத்திக் கொன்றுவிட்டு குளியலறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் நண்பரின் உதவியுடன் ஆற்றில் வீசியுள்ளார். சைக்கோவான மெட்சன் ஒருமுறை வளர்ப்பு எலியை மிக்ஸியில் போட்டு அரைத்ததாகவும் புகார் உள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு பிறகு, உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை, மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் முந்தியுள்ளார். புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பட்டியலில், ஜுக்கர்பெர்க் 186.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். மார்ச் வரை முதலிடத்தில் இருந்த மஸ்க்கின் சொத்து மதிப்பு, 48.4 பில்லியன் சரியவே, 180.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு குறித்து தரக்குறைவாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரசாரத்தின்போது, பிரபல படங்களின் கொடூர கதாபாத்திரங்களுடன் சந்திரபாபு நாயுடுவை ஒப்பிட்டு ஜெகன் மோகன் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
டி20 போட்டிகளில் 150 வெற்றிகள் பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் 148 வெற்றிகளுடன் சிஎஸ்கே அணியும் மூன்றாவது இடத்தில் 144 வெற்றிகளுடன் இந்திய அணியும் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த அணி எது?
பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார். மோடியின் அமைச்சரவையில் 11 பெண்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் அமைச்சரவையில் 2 பேர் மட்டுமே பெண்கள். இதுதான் இமாலய சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.