India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே தேர்தலில் போட்டியிட பாஜக சீட் மறுத்துள்ளது. கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா தொகுதியில் 5 முறை எம்பியாக இருந்தவர் அனந்தகுமார் ஹெக்டே. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்திய அரசியல் அமைப்பு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட பல சர்ச்சை கருத்துக்களை அவர் தொடர்ந்து பேசி வந்தார். இதனால் அவருக்கு சீட் மறுத்துள்ள பாஜக, அங்கு விஷ்வேஸ்வரா ஹெக்டேவுக்கு சீட் வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்ப அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா பார்த்த ஊழல்களில், தேர்தல் பத்திர ஊழல்தான் மிகப்பெரியது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய பாஜக அரசு கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை ஐனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் சர்வாதிகாரமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரியும், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல், தேர்தலை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
பாஜக அகற்றப்பட வேண்டிய கட்சி என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என சிலர் சவால் விட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும். ஒருபோதும் பாஜக ஆட்சிக்கு வரும் நிலை ஏற்படாது. இதற்கு தமிழகத்தின் தேர்தல் முடிவு சாட்சியாக இருக்கும். தேர்தலில் பாஜகவின் அதிகார அகங்காரத்துக்கு மக்கள் தக்க தண்டனை தருவார்கள்” என்றார்.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் பெற்ற வெற்றிக்கு சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டமும் ஒரு காரணமாகும். 39 பந்துகளை எதிர்கொண்ட அவர், 45 ரன்களை குவித்தார். இது 115.38 ஸ்டிரைக் ரேட் ஆகும். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சாய் சுதர்சன், டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஐபிஎல்லுக்குள் நுழைந்தார். தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் விளாசியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு எட்டப்படாததால் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. அங்கு பாஜகவுக்கு 8 எம்.பிக்களுக்கும், 23 எம்எல்ஏக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், 12 பொதுத்துறை வங்கிகளும் மொத்த லாபமாக ₹98,000 கோடியை ஈட்டியுள்ளன. இதனால், தற்போது அரசுக்கு ரூ.15,000 கோடி ஈவுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. 2021-22ஆம் ஆண்டில் ஈட்டிய ₹66,539 கோடியுடன் ஒப்பிடும் போது, பொதுத்துறை வங்கிகள் 2023ஆம் நிதியாண்டில் ₹1.05 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியது. இதன் மூலம் அரசுக்கு 13,804 கோடி ரூபாய் ஈவுத்தொகை கிடைத்தது.
மத்திய அமைச்சரும், காசியாபாத் எம்.பி.யுமான வி.கே.சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர், புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கெனவே, கவுதம் கம்பீர், ஜெயந்த் சின்ஹா, பிகாஜி தாகூர், சத்யதேவ் பச்செளரி, ரஞ்சன் பென் என வேட்பாளர்கள் விலகும் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் பாஜக கலக்கமடைந்துள்ளது.
நீலகிரியின் மலைப்பகுதிகளில் உள்ள படுகர் சமூகம் AIADMK-வை ஆதரிக்கிறது. அதேநேரம் மலை பகுதிகளில் உள்ள பிற சமூகங்கள் மத்தியில் DMK-வின் ஆ.ராசாவுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. வெள்ளாளர், ஒக்கலிகர், அருந்ததியர் சமூகம் பெரும்பான்மையாக தனபால் பின்னால் நிற்பது அதிமுகவுக்கு பலம். இஸ்லாமியர்களின் வாக்குகள் பிளவுப்படும். இது திமுகவுக்கு சற்று பலவீனம். எல்.முருகன் கணிசமான வாக்குகளை வாங்குவார் எனத் தெரிகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் பரப்புரை செய்கிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கெனவே தஞ்சை, திருவாரூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் பரப்புரை செய்தார். இந்நிலையில், நெல்லை மற்றும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நாங்குநேரியில் பரப்புரையை துவங்குகிறார்.
Sorry, no posts matched your criteria.