News April 8, 2024

தேர்தலுக்கு பிறகும் மத்தியப் படைகளை நிறுத்த வேண்டும்

image

தேர்தலுக்கு பிறகும், மேற்கு வங்கத்தில் மத்தியப் படைகளை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, கடந்த முறை தேர்தலுக்கு பிறகு வன்முறை மூண்டதாகவும், அதுபோல இம்முறை நடைபெறாமல் இருக்க மத்தியப் படைகளை தேர்தல் முடிந்தபிறகும் நிறுத்தி வைக்கும்படி ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

News April 8, 2024

தோனியை வீழ்த்த இன்னொரு தோனியாக மாறணும்

image

தோனி ஆக்ரோஷம் காட்டாமல் இருக்கலாம். ஆனால் எளிதில் வெற்றியை விட்டுவிடமாட்டார் என கொல்கத்தா அணியின் ஆலோசகர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், போட்டியின் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்றாலும் களத்தில் தோனி இருந்தால் வெற்றி அவருக்கு தான். அனைத்திலும் அவரை விட நீங்கள் சிறந்தவராக இருந்தால் தான் மட்டுமே அவரை வீழ்த்த முடியுமென புகழாரம் சூட்டியுள்ளார்.

News April 8, 2024

BREAKING: பாஜக மாவட்ட செயலாளரின் பதவி பறிப்பு

image

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் அரசுப் பள்ளியில் உணவுத் திட்ட பொறுப்பாளருக்கு மகுடீஸ்வரன் போதையில் தொல்லை கொடுத்திருக்கிறார். காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்கிறேன் என்று கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

கோவையில் பாஜக தான் வெற்றிபெறும்

image

செந்தில் பாலாஜியே தினமும் செல்போனில் பேசி திமுக அமைச்சர்களை இயக்குவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் இருந்து செந்தில் பாலாஜி தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுப்பதாக கூறிய அவர், தங்கச் சுரங்கத்தையே திமுக கொட்டினாலும் கோவையில் பாஜக தான் வெற்றிபெறும் எனவும் சூளுரைத்தார். மேலும், பதிவாகும் வாக்குகளில் 60% பெற்று நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 8, 2024

புஷ்பா 3 படம் உறுதியானது

image

புஷ்பா 3 படம் எடுக்கப்பட இருப்பதை ஜெகபதி பாபு உறுதி செய்துள்ளார். புஷ்பா முதல் பாகம் வசூலை வாரி குவித்ததால், 2ஆம் பாகம் எடுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் புஷ்பா 3ஆம் பாக திரைப்படமும் எடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அது உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், தாம் அந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறி, ஜெகபதி பாபு உறுதி செய்துள்ளார்.

News April 8, 2024

CTET விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்

image

2024 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) விண்ணப்பங்களில், இன்று முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தங்கள் விவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மாற்றிக் கொள்ளலாம். ஜூலை 7ஆம் தேதி ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைன் முறையில் தேர்வுகள் நடைபெறும்.

News April 8, 2024

33 ஹீரோக்கள்,10 ஹீரோயின்கள் நடித்தும் படம் தோல்வி

image

2003இல் வெளியான இந்திப் படமான எல்.ஓ.சி. கார்கில்,₹33 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில், அஜய் தேவ்கன், சஞ்சய் தத், சைஃப் அலி கான், அபிசேக் பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்ட 33 ஹீரோக்களும், கரீனா கபூர், ராணி முகர்ஜி, ரவீனா தாண்டன் உள்ளிட்ட 10 ஹீரோயின்களும் நடித்திருந்தனர். 4.15 மணி நேரம் ஓடும் இப்படமே, இந்தியாவின் மிக நீளமான படமாக கருதப்படுகிறது. ₹31.60 கோடி வசூலித்து தோல்வியடைந்தது.

News April 8, 2024

ஓவைசி கோட்டையை குறிவைக்கும் பாஜக

image

தொடர்ந்து 40 வருடங்களாக ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது எம்.பியாக ஓவைசி இருந்து வரும் நிலையில், அவரின் தந்தை 1984 முதல் தொடர்ந்து 6 முறை எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார். ஓவைசி 2004 முதல் தொடர்ந்து 4 முறை வென்றுள்ளார். இந்த முறையும் ஓவைசி அங்கு போட்டியிட உள்ள நிலையில், அவரை தோற்கடிக்க பாஜக, லதா என்பரை களமிறக்கியுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 8, 2024

அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு

image

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 8, 2024

இந்தியாவுக்காக ரஷ்யாவில் கட்டப்படும் 2 போர் கப்பல்கள்

image

இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 2 புதிய போர் கப்பல்கள் கட்டப்படுகின்றன. இதுகுறித்து கூறிய இந்திய கடற்படை அதிகாரிகள், 2 துஷில் ரக கப்பல்கள் ரஷ்யாவில் கட்டப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகளை இந்திய கடற்படை உயரதிகாரிகள் அண்மையில் சென்று பார்வையிட்டதாகவும் கூறினர். இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும் அந்த 2 கப்பல்களும் ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் கடற்படையில் இணைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

error: Content is protected !!