News April 8, 2024

ஓவைசி கோட்டையை குறிவைக்கும் பாஜக

image

தொடர்ந்து 40 வருடங்களாக ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது எம்.பியாக ஓவைசி இருந்து வரும் நிலையில், அவரின் தந்தை 1984 முதல் தொடர்ந்து 6 முறை எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார். ஓவைசி 2004 முதல் தொடர்ந்து 4 முறை வென்றுள்ளார். இந்த முறையும் ஓவைசி அங்கு போட்டியிட உள்ள நிலையில், அவரை தோற்கடிக்க பாஜக, லதா என்பரை களமிறக்கியுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 8, 2024

அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு

image

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 8, 2024

இந்தியாவுக்காக ரஷ்யாவில் கட்டப்படும் 2 போர் கப்பல்கள்

image

இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 2 புதிய போர் கப்பல்கள் கட்டப்படுகின்றன. இதுகுறித்து கூறிய இந்திய கடற்படை அதிகாரிகள், 2 துஷில் ரக கப்பல்கள் ரஷ்யாவில் கட்டப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகளை இந்திய கடற்படை உயரதிகாரிகள் அண்மையில் சென்று பார்வையிட்டதாகவும் கூறினர். இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும் அந்த 2 கப்பல்களும் ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் கடற்படையில் இணைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

News April 8, 2024

ராகுல் கூட்ட மேடை பேனரில் பாஜக தலைவர் படம்

image

ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்ட மேடையில் வைக்கப்பட்ட பேனரில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பகன் சிங் குலாஸ்தே புகைப்படம் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட பேனர் வைத்திருந்தனர். அதில் கார்கே, சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் குலாஸ்தே படமும் இருந்தது. இதையடுத்து அந்த படம் உடனடியாக காங்கிரசாரால் மறைக்கப்பட்டது.

News April 8, 2024

விவாகரத்து கோரி தனுஷ்- ஐஸ்வர்யா மனு

image

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரஜினி மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவகாரத்து கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

News April 8, 2024

ஜூன் 4 வரை பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு

image

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும், தேர்தல் கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, ஏப்.19 வரை மட்டுமே கட்டுப்பாடுகள் என நினைத்த தமிழக மக்கள், வணிகர்களின் தலையில் இடியாக வந்து இறங்கியிருக்கிறது.

News April 8, 2024

பிரதமரின் ரோடு ஷோவுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

image

சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பட்டாசு வெடிக்கக் கூடாது, அலங்கார வளைவுகள் அமைக்கக்கூடாது, வெறுப்புணர்வை தூண்டும் வகையில், மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் முழக்கம் எழுப்பக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும், பேனர், கட் அவுட்டுகள் கண்டிப்பாக வைக்கக்கூடாது, பதாகைகளை ஏந்திச்செல்லகூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

சூரிய, சந்திர கிரகணங்கள் வித்தியாசம் என்ன? (1)

image

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று 2 கிரகணங்கள் உள்ளன. இதில் சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு பயணிக்கும்போது ஏற்படும் நிகழ்வாகும். அப்போது சூரிய ஒளி முழுமையாகவோ, லேசாகவோ அல்லது பாதியாகவோ பூமி மீது விழாமல் தடுக்கப்படும். இதனால் சூரிய கிரகணம் 3 வகைபடுத்தப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் ஆண்டுக்கு 2 முதல் 5 முறைகள் வரை ஏற்படும் என சொல்லப்படுகிறது.

News April 8, 2024

சூரிய, சந்திர கிரகணங்கள் வித்தியாசம் என்ன? (2)

image

அண்டவெளியில் சுற்றும் பூமி, சூரியன் மற்றும் நிலவுக்கு இடையே பயணிக்கையில் சந்திர கிரகணம் நிகழும். அப்போது சூரிய ஒளியை நிலவு மீது விழாமல் தனது நிழலை நிலவு மீது பூமி விழச் செய்யும். இந்த சந்திர கிரகணமானது, ஒரு வருடத்துக்கு 3 முறை ஏற்படும். சூரியன், சந்திரன், பூமி ஆகியவை எவ்வாறு வரிசையாக அமைகின்றன என்பதைப் பொறுத்து, பகுதியளவு சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம் என 2 வகைபடுத்தப்படும்.

News April 8, 2024

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

image

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, 3 மாதத்தில் முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பெரியசாமி தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது கீழமை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!