India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு பாய்மரப் படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சீமான் முறையீடு செய்துள்ளார். கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாதக மேல்முறையீடு செய்த வழக்கு நாளை (மார்ச் 26) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே, நாதகவிற்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை ஏற்காத நாதக, பாய்மரப் படகு சின்னம் கேட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் 2ஆம் கட்ட போட்டிகளின் அட்டவணை இன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான விவரங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, ▶குவாலிபையர் 1- நரேந்திர மோடி மைதானத்தில் வரும் மே 21. ▶எலிமினேட்டர்- நரேந்திர மோடி மைதானத்தில் மே 22. ▶குவாலிபையர் 2- சேப்பாக்கம் மைதானத்தில் மே 24, ▶இறுதிப்போட்டி- சேப்பாக்கம் மைதானத்தில் மே 26 அன்று நடைபெற உள்ளது.
நடிக்க வேண்டுமென்று இதுவரை முயற்சி செய்ததில்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இனிமேல் ஆல்பம் பாடல் குறித்து பேசிய அவர், “பாடலின் கதையை படித்துவிட்டு இயக்குநரையும், படக்குழுவையும் சந்தித்தேன். கடைசி வரைக்கும் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. படப்பிடிப்புக்கு செல்வதற்கு எனக்கு தைரியமே இல்லை. யாரும் காரி துப்பாத அளவிற்கு நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்றார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், நெல்லை, மயிலாடுதுறைக்கு இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. உட்கட்சி பூசலால், வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நாங்குநேரியில் பிரசாரம் செய்யும் முன்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகுமென கூறப்படுகிறது.
வலிப்பு, நரம்பு வலி, பதற்றம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் ப்ரீகாபலின் மாத்திரையால்(Pregabalin) மரணிக்கும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொண்ட பலர் மரணத்தை சந்தித்துள்ளதாக எச்சரித்துள்ள இங்கிலாந்து மருத்துவர்கள், இதை எடுத்துக்கொண்ட பிறகு மது அருந்தக் கூடாது என எச்சரித்துள்ளனர். அதே வேளையில் சரியான அளவு எடுத்துக் கொண்டால் பிரச்னை இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையானது வசந்த காலத்தை வரவேற்பதற்காக கொண்டாடப்படுகிறது. சௌகார்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடி பூசி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். காலை 7 மணிக்கே தொடங்கிய இப்பண்டிகையால், ஒட்டுமொத்த இந்தியாவும் வண்ணமயமாக மாறியுள்ளது. நீங்கள் ஹோலி கொண்டாடினீர்களா?
திமுக, அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருக்க வேண்டி இருந்ததாக வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “காவல்துறையினர் வழிமுறைகளை பின்பற்றி வேட்பாளர்களை அனுப்பாமல், அதிமுக, திமுகவினரை ஒரே நேரத்தில் உள்ளே அனுமதித்தனர். இவர்கள் இருவருக்குள் நடந்த அமளியால் எங்களால் குறித்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை” என்றார்.
தமிழகத்தில் தனது தலைமையில் பாஜக வளர்ந்திருக்கிறது என்றால் அண்ணாமலை சொந்த தொகுதியில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன் என கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசிய அவர், “கரூரில் போட்டியிட்டால், டெபாசிட் கிடைக்காதென அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் என்னை எதிர்த்து நிற்க பயந்து கோயம்புத்தூருக்கு ஓடி விட்டார்” என்றார்.
இந்தியன் 2, இந்தியன் 3 படங்கள் குறித்து புதுத் தகவலை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தியன் 2, இந்தியன் 3 படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. தற்போது, இந்தியன் 2 பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு, இந்தியன் 3 பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கும். மக்களவைத் தேர்தல் முடிந்ததும், மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என்றார்.
தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., உயர்த்தியதை அன்புமணி கண்டித்துள்ளார். பொதுப்பிரிவு கட்டணம் – ₹2,500, MBC – ₹2,000, SC, ST – ₹800ஆக உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்திய அவர், இதன் மூலம் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஒன்றரை லட்சம் பேரிடம் இருந்து ₹30 கோடி வசூலாகும். இந்தத் தேர்வு நடத்த அவ்வளவு செலவாகாது எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.