News April 9, 2024

அரசுப் பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி

image

திருப்பூர் அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60வது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோயில் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை காங்கேயம் அருகே பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

கச்சத்தீவைப் பற்றி இதற்காக தான் பேசுகிறார்கள்

image

இந்திய – சீன எல்லை விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே கச்சத்தீவு பிரச்னையை பாஜக தூண்டுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், “கச்சத்தீவு பிரச்னையில் திமுக அமைதியாக இல்லை. 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தான் அமைதியாக இருந்தது. பிரதமர் மோடி பலமுறை இலங்கைக்கு போய் வந்திருக்கிறார். அப்போது கூட அந்நாட்டு அரசிடம் அவர் இதுகுறித்து பேசவில்லை” என்றார்.

News April 9, 2024

IPL: ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது

image

KKR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK வீரர் ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறப்பாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து சுனில் நரைன், ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ஃபில் சால்ட், மிட்செல் ஸ்டார்க், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரது கேட்சுகளையும் பிடித்து, நேற்றைய போட்டியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார்.

News April 9, 2024

திருமணத் தடையை நீக்கும் திருமணஞ்சேரி ஆலயம்

image

திருமணத் தடை நீங்க திருமணஞ்சேரி கோயிலுக்கு சென்று வழிபடலாம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருப்பவர்கள், இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், இந்த தலத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும். இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருமண தோஷம் உடையவர்கள் தாராளமாக இங்கு சென்று வழிபடலாம்.

News April 9, 2024

குதிரையேற்ற பயிற்சியில் நடிகர் சூர்யா

image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, இம்மாதம் தொடங்கவுள்ளது. சுமார் இரண்டரை வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவான இப்படம், முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் உருவாக உள்ளது. இப்படத்திற்காக, நடிகர் சூர்யா குதிரையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

News April 9, 2024

ஜெயித்தாலும் சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

image

கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற்றும் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே தொடர்ந்து 4ஆவது இடத்தில் உள்ளது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. 5 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, 2 தோல்வி 3 வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. லக்னோ அணி, 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 3 ஆவது இடத்தில் தொடரந்து நீடிக்கிறது. ஆனாலும் ரன் ரேட் அடிப்படையில் லக்னோ அணி சென்னையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

News April 9, 2024

Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

ரயில் பெட்டித் தொழிற்சாலையில் நிரப்பப்படவுள்ள 550 Technical Apprentices பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Fitter, Welder, Machinist, Painter, Carpenter உள்ளிட்ட பிரிவுகளில் Apprentices ஆக பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ITI. வயது வரம்பு: 15- 24. தேர்வு: Merit List முறை. கூடுதல் தகவல்களுக்கு <>RCF<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News April 9, 2024

குஷி படத்துக்கு முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா?

image

விஜய், ஜோதிகா நடித்த குஷி படம் மெகா ஹிட்டானது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த படத்திற்கு முதலில் ‘முத்தம்’ என பெயர் வைத்தனர். ஆனால், தியேட்டருக்கு வரும் பெண்கள் டிக்கெட் எடுக்க சிரமப்படுவார்கள் என்று பலரும் ஆலோசனை கூறியதால், படக்குழு குஷி என்று பெயரை மாற்றியது. படத்தின் நிறைவு காட்சியில் விஜய்-ஜோதிகா இருவரும் முத்தம் கொடுக்கும் சீன் இருந்ததால் படக்குழு முத்தம் என்று முதலில் பெயரிட்டுள்ளது.

News April 9, 2024

IPL: புள்ளிப் பட்டியலில் முன்னேறப் போவது யார்?

image

ஹைதராபாத் – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 23ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு மொஹாலியில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் அடுத்தடுத்து (SRH-5, PBKS-6) உள்ளது. இதனால், எந்த அணி முன்னேறப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியிலும் சாதனைகளை படைக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

News April 9, 2024

திமுகவிற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு

image

வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவிற்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்கிரமராஜா, தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்ததற்கு நன்றி கூறி, I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்தார்.

error: Content is protected !!