News April 9, 2024

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் மைக் மோகன்?

image

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில், ரஜினிக்கு வில்லனாக மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரஜினியின் 171ஆவது படமான இது, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகவுள்ளது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும், ஷாருக்கான் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 9, 2024

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது

image

5,990 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 2.5 பேர் வீதம், சுமார் 14,500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். தேர்வு முடிவுகளை <>tnpsc.gov.in<<>> என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மேலும், கடந்த மார்ச் மாதம் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 12ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

News April 9, 2024

6வது முறையாக இன்று மாலை தமிழகம் வருகிறார் மோடி

image

பிரதமர் மோடி 6வது முறையாக இன்று மாலை 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை மாலை ரோடு ஷோவில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை வேலூர், நீலகிரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி என மத்திய அமைச்சர்களும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

News April 9, 2024

ரொனால்டோ அணி அதிர்ச்சி தோல்வி

image

சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், அல்-நாசர் அணி தோல்வி அடைந்துள்ளது. அல்-ஹிலால் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில், இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அல்-ஹிலால் அணி முன்னிலை வகித்தது. எதிரணி வீரரை தாக்கிய ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். இறுதி நிமிடத்தில் அல்-நாசர் அணி 1 கோல் அடித்து, 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

News April 9, 2024

பாஜக அமைச்சரின் சவாலை ஏற்ற சசி தரூர்

image

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விடுத்த நேரடி விவாதத்திற்கான அழைப்பை காங்., எம்.பி. சசி தரூர் ஏற்பதாக அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பேசிய அவர், “நேருக்கு நேர் விவாதத்திலிருந்து நழுவி ஓடிக்கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவர். கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில், விலைவாசி உயர்வு, ஊழல், வகுப்புவாத அரசியலை பரப்பும் பாஜகவின் கொள்கைகள் குறித்து வெளிப்படையாக பேசுவோம்” என்றார்.

News April 9, 2024

ரஷ்ய ராணுவம் வெளியேற வேண்டும்

image

ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. உக்ரைன் வசமிருந்து கடந்த 2022இல் ரஷ்யா கைப்பற்றிய அணுமின் நிலையம் மீது நடந்த தாக்குதலில், 3 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 9, 2024

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

image

தமிழக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி நேற்றுடன் (08.04.2024) நிறைவு பெற்றது. ஆகையால், இன்று முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. அடுத்த கட்டமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பு (அ) பல்தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராக உள்ளனர். மே.10ம் தேதி இத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

News April 9, 2024

ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் வீட்டில் சோதனை

image

சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாஃபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் இடங்களிலும் சோதனை நடக்கிறது. அதேபோல், இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், இச்சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2024

புதிய அறக்கட்டளையை தொடங்கிய சென்னை ஐஐடி

image

இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை உலகளவில் கொண்டு சேர்க்க புதிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையின் சி.இ.ஓ-வாக வணிக மேலாண்மை & தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவநாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் தொழில்நுட்பம் & நிதி போன்ற வணிக ரீதியிலான உதவிகளைப் பெற்று தரும் எனக் கூறப்படுகிறது.

News April 9, 2024

அரசுப் பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி

image

திருப்பூர் அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60வது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோயில் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை காங்கேயம் அருகே பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!