India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 – 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38 – 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசெளகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். தொடர்ந்து பல மெகா ஹிட் படங்களை வழங்கி வந்த இவர், திருமணத்திற்கு பிறகு பெரிய சறுக்கலை சந்தித்தார். குடும்ப பிரச்னையால் பல ஆண்டுகள் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் திணறி வந்தார். தற்போது விஜய் உடன் இணைந்து GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது உறவினர் பெண்ணை அவர் 2ஆவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்தைப் பெற்று தந்தது பாட்ஷா படம். 1995இல் வெளியாகி வெள்ளிவிழா கண்ட அந்தப் படத்தை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்தது. படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி அரசியல் பேசி பரபரப்பை கிளப்பினார். இந்த காரணத்திற்காகவே அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீ பதவியிலிருந்து மட்டுமல்ல கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
1953இல் எம்.ஜி.ஆர் தொடங்கிய ‘MGR Pictures’ தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர் வீரப்பன். அவர்தான் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கான கடன் பத்திரங்களில் எம்.ஜி.ஆரின் சார்பாகக் கையெழுத்திட்டவர். அதிகப்படியான தயாரிப்பு செலவால் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்ற எம்.ஜி.ஆருக்கு கடிவாளம் போல இருந்து, அப்படத்தையும், நாடோடியாக போக இருந்த அவரையும் மன்னராக ஆக்கினார்.
2012ஆம் ஆண்டு இதே நாளில், கடைசி பந்தில் சிக்சர் அடித்து ரோஹித் ஷர்மா மும்பை அணியை வெற்றி பெற செய்தார். ஹைதராபாத்துக்கு எதிரான இப்போட்டியில், 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. கடைசி 3 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரோஹித் ஷர்மா 6 2 6 என விளாசி அணியை வெற்றி பெற செய்தார். மேலும், மும்பை இந்தியன்ஸ் சார்பாக தன்னுடைய முதல் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
சீனாவில் பணவீக்கம் ஒரு பிரச்னையாக இல்லையென்றாலும், அந்நாட்டின் பொருளாதார மீட்சி பலவீனமாக உள்ளதாக ING வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் லின் சாங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வரலாற்றில் மிக மோசமான நில விலை வீழ்ச்சியின் மத்தியில் சீனா உள்ளது. வளர்ச்சியைத் தூண்டுவதற்கு தீவிரமான கொள்கைகளை அந்நாடு பின்பற்றவில்லை. அதன் பொருளாதாரக் கொள்கை முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
திரையுலகில் புரட்சி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் அரசியலில் புரட்சித் தலைவராக உயர மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். ‘சின்னவரின் மனசாட்சி’ என அழைக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆரின் உதவியாளர், ரசிகர் மட்டுமல்ல ஆலோசகராகவும் இருந்துள்ளார். நடிகன் நாடாள முடியுமா? என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து திமுக தலைமை எள்ளி நகையாடியபோது, அவர் கட்சி தொடங்க நெருக்கடிகளுக்கு மத்தியில் வீரப்பன் தான் துணை நின்றார்.
தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரான ஆர்.எம்.வீரப்பன் (98) காலமானார். 1977ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை 5 ஆட்சிகளில் இவர் அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்து அதிமுகவை தொடங்கியபோது அக்கட்சியை கட்டமைத்தவர் ஆர்.எம்.வி. சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்தவர், பின்னாளில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
▶விராட் கோலி – 7579
▶ஷிகர் தவான் – 6755
▶டேவிட் வார்னர் – 6555
▶ரோஹித் ஷர்மா – 6329
▶எம்.எஸ்.தோனி – 5121
▶தினேஷ் கார்த்திக் – 4606
▶ரஹானே – 4519
▶கே.எல்.ராகுல் – 4289
▶டு பிளெசிஸ் – 4242
▶சஞ்சு சாம்சன் – 4066
முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் (98) உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக நீண்ட நாள்களாக வீட்டில் இருந்த அவருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.