News April 10, 2024

தமிழகம் வருகிறார் அமித் ஷா

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தில் பிரசாரம் செய்யவிருக்கிறார். ஏற்கெனவே இரண்டுமுறை அவர் தமிழகம் வருவதாக திட்டமிடப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 12ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் அவர், மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர், 14ஆம் தேதி காலையில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார்.

News April 10, 2024

நிலவில் இந்தியர் தரையிறங்க இதுதான் முதல்படி

image

‘சந்திரயான் 4’ திட்டம் நிலவில் இந்திய வீரர்கள் தரையிறங்குவதற்கான முதல் படி என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2040ஆம் ஆண்டுக்குள் மனிதனை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் அவசியமாகிறது. அதன் ஒரு பகுதியாக ‘சந்திராயன் 4’ மூலம் நிலவின் சில மாதிரிகளை எடுத்து வந்து ஆராய திட்டமிட்டுள்ளாக அவர் தெரிவித்தார்.

News April 10, 2024

விண்ணுலகம் சென்றார் ஆர்.எம்.வீரப்பன்

image

சென்னையில் நேற்று வயது மூப்பால் காலமான முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின்மயானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட பூத உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மறைந்த ஆர்.எம்.வீ, அதிமுகவின் எம்.ஜி.ஆர், ஜானகி ,ஜெ.வின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.

News April 10, 2024

தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு மோசடி

image

தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் சட்டப்படி, ஒரு நிறுவனம் 3 ஆண்டுகளை நிறைவு செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும். ஆனால், SBI தகவல்படி, 3 ஆண்டுகள் நிறைவடையாத 20 நிறுவனங்கள், ₹103 கோடி வரை நன்கொடை வழங்கியுள்ளன. இது பற்றி X-இல் பதிவிட்டுள்ள பிரசாந்த் பூஷன், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல மோசடிகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

News April 10, 2024

இந்திய வம்சாவளி மாணவர்கள் மரணம்! பின்னணி என்ன?

image

அமெரிக்காவில் நடப்பு ஆண்டு இந்திய வம்சாவளி மாணவர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அனைவரும் 25 வயதிற்குட்பட்டவர்கள். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், துப்பாக்கிச்சூடு, கடத்தல், தற்கொலை உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய காரணங்கள் இறப்புகளுக்கான பின்னணியாக இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இனவெறியை மாணவர்களின் மரணங்களுக்கான காரணமாக கருத முடியாது எனக் கூறப்படுகிறது.

News April 10, 2024

அனில் அம்பானிக்கு ரூ.8,000 கோடி தர வேண்டாம்

image

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு ரூ.8,000 கோடி இழப்பீடு தர வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, ஒப்பந்தத்தை மீறியதற்காக ரூ.8,000 கோடி இழப்பீடு வழங்க டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் ஒரே நாளில் 20% சரிவை சந்தித்துள்ளன.

News April 10, 2024

ஜனநாயக நாட்டில் எதுவும் செய்ய முடியாது

image

பரந்தூர் மக்களிடம் காஞ்சிபுரம் தேர்தல் அதிகாரி பேச்சு நடத்துவார் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார். பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காக நிலம் எடுக்கப்படுவதை எதிர்த்து போராடும் மக்கள், அதன் ஒருபகுதியாக மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவை கைவிட மக்களிடம் பேசுவோம் எனக் கூறிய சாகு, அதன் பிறகும் தேர்தலை புறக்கணித்தால் ஜனநாயக நாட்டில் எதுவும் செய்ய முடியாது எனக் கூறினார்.

News April 10, 2024

ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதை

image

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரும் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பருமாகிய ஆர்.எம்.வீ நேற்று சென்னையில் காலமானார். முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், அரசு மரியாதை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.

News April 10, 2024

நான் அனைவருக்கும் மேல்தான்: இளையராஜா

image

இளையராஜாவின் 4500க்கும் அதிகமான பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனம் வைத்திருக்கிறது. அதற்கான ராயல்டியை அந்நிறுவனம் வழங்குவதில்லை என்று ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார் இளையராஜா. அதன் விசாரணையின்போது, “தன்னை அனைவருக்கும் மேல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா” என்று எக்கோ நிறுவன வழக்கறிஞர் கூறினார். அதற்கு இளையராஜாவின் வழக்கறிஞர், “ஆம். நான் எல்லோருக்கும் மேல்தான்” என்று பதிலளித்தார்.

News April 10, 2024

CSK அணியுடன் விரைவில் இணையும் கான்வே

image

ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மே மாத தொடக்கத்தில் அவர் சிஎஸ்கே அணியில் இணைவார் என வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். மே மாதம் IPL பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது.

error: Content is protected !!